DMK
உலக அளவில் கலைஞர் அரசு பெற்ற விருதுகளும் பாராட்டுகளும்! : மகுடம் சூடிய தி.மு.க -1
சமூக நீதிக் காவலரும் நிர்வாகத் திறன் மிக்க மூத்த அரசியல் வித்தகருமான தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 6-3-1967 முதல் 3-2-1969 வரை பேரறிஞர் அண்ணா அவர்களின் அமைச்சரவையில் அமைச்சராகவும், 10-10-1969 முதல் 04-01-1971 வரை,15-03-1971 முதல் 31-01-1976 வரை, 27-1-1989 முதல் 30-01-1991 வரை, 13-05-1996 முதல் 13-05-2001 வரை 13-05-2006 முதல் 13-05-2011 வரையிலுமான காலகட்டங்களில் ஐந்து முறை 19 ஆண்டுகள் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் பதவி வகித்தார்.
1957 முதல் தோல்வியே இன்றி 2018-ல் மறையும் நாள் வரை 14 முறை சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து வெற்றிபெற்று வரலாற்றில் நெடுங்காலம் தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினராகவும் 1962 முதல் 1967 வரை எதிர்கட்சித் துணைத் தலைவராகவும் 1977 முதல் 1983 வரை ஒருமுறை, மீண்டும் 1984 முதல் 1986 வரை ஒரு முறை, என இரண்டு முறை எதிர்கட்சித் தலைவராகவும் பதவி வகித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு அரசிற்கும், தமிழக அரசியலுக்கும், தமிழ்நாட்டிற்கும், உலகெங்கும் வாழ்ந்துவரும் தமிழர்களுக்கும் இந்திய திருநாட்டிற்கும் இந்திய அரசியலுக்கும் பெருமை சேர்த்தார்.
அரசியல் மாமேதை கலைஞர் அவர்கள் தமிழக முதலமைச்சராக இருந்து ஆற்றிய மாபெரும் சாதனைகளாலும், சென்னை மாநகராட்சி மேயராகவும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் துணை முதலமைச்சராகவும் பொறுப்புகள் வகித்து மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் நற்பணிகளாலும் தமிழக தி.மு.க அரசு பல பன்னாட்டு, தேசிய விருதுகள் மற்றும் பாராட்டுகளைப் பெற்றது. அவற்றில் மிக முக்கியமான சில விருதுகள் மற்றும் பாராட்டுகள் பற்றிய தகவல்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.
பின்வழியாக எஞ்சியுள்ள காலத்திற்கான இடைக்கால முதலமைச்சராகி அரசியல் சூழ்நிலையால் அப்பதவியில் தொடரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சமீபகாலமாக கோடி கோடியாக அரசுப் பணத்தை வீணாக செலவு செய்து சுயநல நோக்கில் அரசு சார்பாக அனைத்து ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் அவரது படத்தையும் போட்டு விளம்பரங்கள் கொடுக்கச் செய்தார்.
அ.தி.மு.க அரசு சார்பாக வெளியிடப்பட்ட சுயநல விளம்பரங்களில் பல தவறான தகவல்கள் உள்ளன. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும் அன்பு தலைவர் தளபதி அவர்களும் ஆட்சியில் இருந்தபோது ஆற்றிய சாதனைகளில் பலவற்றை அ.தி.மு.க அரசு தங்களது சாதனைகளாக குறிப்பிட்டிருப்பது தவறாகும். இவர்களைப் புகழ்ந்து இவர்களே எழதிக்கொண்ட சுய விளம்பர வாசகங்களே அந்த விளம்பரங்களில் அதிகம் உள்ளன.
இந்தியாவில் அ.தி.மு.க அரசு முதலிடம் பெற்று விருது பெற்றுள்ளதாக வெற்றி நடைபோடும் தமிழகம் எனும் தலைப்பில் தமிழ்நாடு அரசின் சார்பாக வெளியிடப்பட்ட தரப்பட்டுள்ள தகவல்கள் பெரும்பாலனவை சுய அறிவிப்புகளே ஆகும்.
19 ஆண்டுகள் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் நல்லாட்சி நல்கிய தி.மு.க அரசு ஏராளமான சாதனை புரிந்து அவற்றிற்காக பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான பல விருதுகளும் பல பாராட்டுகளும் பெற்று தமிழக அரசிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் பெருமை சேர்த்தது.
தி.மு.க அரசு பெற்ற பன்னாட்டு விருதுகளும் பாராட்டுகளும் : உலகின் மிகப்பெரிய உர நிறுவனங்களில் ஒன்றான இப்கா எனும் உர கூட்டுறவு நிறுவனம் 1998-99 ஆண்டிற்கான "சக ஹாரிதா பந்து" எனும் விருதினையும் ரூ.51,000/- ரொக்கப் பரிசு தொகையினையும் 19.11.1999 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக அரசிற்கு வழங்கி கௌரவித்தது.
* சிறந்த நிர்வாகத் திறமைக்காக தமிழ்நாடு நகராட்சி துறைக்கு 2008 ஆம் ஆண்டிற்கான பன்னாட்டு தரச்சான்றிதழ் ISO 9000 வழங்கப்பட்டது. ஈரோடு, மதுரை, திருச்சி, தூத்துக்குடி மாநகராட்சிகளில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடைகளுக்கு பன்னாட்டு தரச்சான்றிதழ் நிறுவனத்தால் தரச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
* 1975ம் ஆண்டு சென்னை வந்த ஆஸ்திரேலிய நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் வித்தர்ஸ் அவர்கள் முதலமைச்சர் கலைஞர் தலைமையிலான தமிழக அரசின் நற்பணிகளால் தமிழ்நாடு பெற்றுள்ள வளர்ச்சியைப் பெரிதும் பாராட்டினார்.
* கிராமப்புற மக்களுக்கு தமிழ்நாட்டில் தி.மு.க அரசு அளித்து வரும் மருத்துவ வசதிகள், அமெரிக்க நாட்டில்கூட இல்லை என்றுகூறி அமெரிக்க தூதர் தி.மு.க அரசை பெரிதும் பாராட்டினார். 1996-2001ல் தி.மு.க ஆட்சியில் குழந்தைகள் நலம் காக்கும் போலியோ நோய் ஒழிப்புத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு மிக நன்றாக செயல்படுத்தியது என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்து அதற்கான பாராட்டுகளை தமிழக அரசிற்கு வழங்கி கொளரவித்தது.
தி.மு.க அரசிற்கு உலக வங்கி பாராட்டு : 1996-2001 தி.மு.க ஆட்சியில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் திட்டங்களை மிகச் சிறப்பாக செயல்படுத்துவதில் தமிழ்நாடு ஆசியாவிலேயே மிகச் சிறந்து விளங்குகிறது என்று தி.மு.க அரசை உலக வங்கி பாராட்டியது. 1996-2001 திமுக ஆட்சியில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் திட்டங்களை மிகச் சிறப்பாக செயல்படுத்துவதில் தமிழ்நாடு ஆசியாவிலேயே மிகச் சிறந்து விளங்குகிறது என்று தி.மு.க அரசை உலக வங்கி பாராட்டியது.
* மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு ஆறு விருதுகளை வழங்கியது. அந்த விருதுகளை தமிழ்நாடு அரசின் சார்பாக துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டெல்லியில் பெற்றுக்கொண்டார்.
* உலக வங்கி உதவியுடன் தமிழ்நாட்டில் 2006-ஆம் ஆண்டு ''வாழ்ந்து காட்டுவோம்'' திட்டத்தை ரூ.950 கோடி செலவில் 1661 ஊராட்சிகளில் நன்கு செயல்படுத்திய தமிழ்நாடு அரசை உலக வங்கி பெரிதும் பாராட்டியது.
* தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் சீரிய நிர்வாக முறை, சிறந்த மேலாண்மை ஆகியவற்றை பாராட்டி நகராட்சி நிர்வாக இயக்குனரகத்திற்கு 2008 ஆம் ஆண்டில் பன்னாட்டு தரச் சான்றிதழ் ISO 9000-2000 வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சிக்கு 16-7-2007 அன்றும், மதுரை மாநகராட்சிக்கு 17-7-2007 அன்றும், திண்டுக்கல் நகராட்சிக்கு 29-9-2008 அன்றும், திருச்சி மாநகராட்சிக்கு 14-2-2009 அன்றும் பன்னாட்டு சான்றிதழ் வழங்கும் நிறுவனம் ISO 9001-2001 தரச் சான்றிதழ் வழங்கியது.
தி.மு.க அரசிற்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு : பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசைப் பிற மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 12-8-2010 அன்று முன்னுதாரணப்படுத்தி உரைத்து தமிழக அரசிற்குப் பெருமை சேர்த்தனர்.
* மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தை தமிழ்நாடு மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்று உச்சநீதிமன்றம் பாராட்டியதோடு மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்றும் கருத்துக் கூறியது. கொத்தடிமை முறையை ஒழிப்பதில் தமிழ்நாடு அரசு இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக செயல்படுகிறது என உச்சநீதிமன்றம் தமிழக அரசை பாராட்டியது.
குடியரசுத் தலைவர் விருதும் பாராட்டும் : இந்தியாவிலேயே மிக அதிக அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கி பெரும் தொண்டு செய்ததற்காக தமிழ்நாடு அரசின் மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு இந்திய குடியரசுத் தலைவர் அவர்கள் 31-12-2009 அன்று தேசிய விருதினை வழங்கினார்.
இந்தியாவிலேயே தேசிய ஊரக நல்வாழ்வுத் திட்டங்களை தமிழ்நாடு அரசு மிக நன்கு செயல்படுத்தியதற்காக 12-4-2010 அன்று டெல்லியில் நடைபெற்ற அரசு விழாவில் மத்திய அரசின் விருதினை இந்திய துணைக் குடியரசுத் தலைவர் அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு வழங்கி சிறப்பித்தார்.
பிரதமர் பாராட்டு : முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 48வது பிறந்த நாளான 03-06-1971 அன்று ஆரம்பிக்கப்பட்ட தொழுநோயாளிகள் மற்றும் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம் தமிழ்நாட்டில் 20 மையங்களில் செயல்படுத்தப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், பரனூரில் செயல்பட்டு வந்த தொழு நோயாளிகள் மற்றும் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு விடுதியை இந்திய பிரதமர் திருமதி.இந்திராகாந்தி அம்மையார் நேரில் பார்வையிட்டு முதலமைச்சர் கலைஞர் கொண்டுவந்த தொழு நோயாளிகள் மற்றும் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டத்தைப் பெரிதும் பாராட்டினார்.
தி.மு.க அரசிற்கு இந்தியத் துணைப் பிரதமர் பாராட்டு : அரிஜன மக்களுக்கு கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு ஆற்றிய வீட்டுவசதி சேவைகளை 1975 ஜனவரி மாதம் நடந்த அரசு விழாவில் மத்திய அரசின் உணவு அமைச்சரும் இந்தியாவின் துணைப்பிரதமருமான ஜெகஜீவன்ராம் அவர்கள் பெரிதும் பாராட்டியதோடு தி.மு.க அரசின் முன்னுதாரணத்தைத பிற மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்தியாவின் பல குடியரசுத் தலைவர்களும் பிரதமர்களும் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்களின் அரசியல் ஞானத்தையும் நிர்வாகத் திறமையையும் அவரின் பல்துறை ஆற்றல்களையும், கலைஞர் தலைமையிலான தமிழ்நாடு அரசின் சாதனைகளையும் பல முறை பாராட்டியுள்ளனர்
தி.மு.க அரசிற்கு மத்திய அமைச்சர்கள் பாராட்டு : சுகாதாரத் திட்டங்களை இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசுதான் மிகச் சிறப்பாக செயல்படுகின்றது என்று மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் அவர்கள் பெரிதும் பாராட்டினார்.
சென்னையில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதிலும் கருவுற்ற தாய்மார்களின் நலன்களைப் பேணுவதிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டதற்காக Population foundation of India எனும் நிறுவனம் ஜே.ஆர்.டி டாடா நினைவு விருது, சான்றிதழ் மற்றும் ரூபாய் இரண்டு லட்சம் பரிசுத் தொகை ஆகியவற்றை 31-1-2001 அன்று டெல்லியில் நடந்த அரசு விழாவில் மத்திய சுகாதார அமைச்சர் சி.பி தாகூர் அவர்கள் சென்னை மாநகராட்சி மேயர் வணக்கத்திற்குரிய மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கி அவரை கௌரவித்தார்.
தேசிய அளவில் மிகச்சிறந்த கிராமங்கள் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 1476 கிராமங்களில் சேர்க்கப்பட்டு அந்த சிறந்த கிராமங்களுக்கு மத்திய அரசின் "நிர்மல் புரஸ்கார்" விருது வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சிறப்பான செயல்பட்டிற்காக தேசிய உற்பத்தித் திறன் குழு ஆண்டுதோறும் வழங்கும் 10 விருதுகளில் 1997ஆம் ஆண்டு ஏழு விருதுகளையும் 1998-1999 ஆம் ஆண்டில் 5 விருதுகளையும் தமிழக திமுக அரசு பெற்றது.
மாநில சாலை போக்குவரத்து நிறுவனங்களின் கூட்டமைப்பு குழு வழங்கும் 9 விருதுகளை 1999-2000 ஆண்டு தி.மு.க அரசின் போக்குவரத்துத் துறை பெற்றது. மிகச் சிறந்த செயல்பாட்டிற்காக தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அகில இந்திய அளவில் 2007-2008ம் ஆண்டு முதலிடம் பிடித்து அதற்கான விருதையும் பரிசுத்தொகை ரூபாய் ஒரு கோடியையும் பெற்றது.
2010-ஆம் ஆண்டு இந்தியாவில் மக்கள் பாதுகாப்பு, குடிநீர், சுகாதாரம், மக்கள் மேம்பாடு ஆகிய துறைகளில் மிகச் சிறந்த சேவை செய்ததற்காக இந்தியாவின் மிகச் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு அதற்கான முதல் பரிசையும் வைர மாநில விருதினையும் தமிழ்நாடு அரசு பெற்றது. தமிழ்நாடு ஊராட்சித் துறையின் சிறப்பான செயல்பட்டிற்காக 2009-2010 ஆண்டிற்கான அகில இந்திய அளவில் இரண்டாம் பரிசினைத் தமிழ்நாடு அரசு பெற்றது.
மிகவும் தூய்மையான நகரத்திற்கான விருது : சென்னை மாநகராட்சி மேயர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மேற்கொண்ட சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகளைப் பாராட்டி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு கழகம் சென்னை மாநகராட்சியை இந்தியாவின் மிகச் சிறந்த மாநகராட்சியாகத் தேர்ந்தெடுத்து மிகவும் தூய்மையான நகரததிற்கான விருதினை (CLEAN CITY AWARD) சென்னை நகரத்திற்கு வழங்கியது.
சிறந்த பாலத்திற்கான விருது: போக்குவரத்து நெரிசலைப் போக்கிட சென்னை நகரின் முக்கிய சாலைகளில் 9 பாலங்கள் கட்டப்பட்டன. அந்த பாலங்களின் நேர்த்தி மற்றும் வடிவமைப்பை ஆய்வு செய்த மும்பையைச் சேர்ந்த INDIAN ISTITUTE OF BRIDGE ENGINEERS எனும் நிறுவனம் அந்தப் பாலங்களில் ஒன்றான சர்தார் பட்டேல் சாலை பாலத்தின் வடிவமைப்பைப் பெரிதும் பாராட்டி சென்னை மாநகராட்சிக்கு விருது வழங்கி கௌரவித்து பெருமைப்படுத்தியது.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்துவதில் 2007-2008 ஆம் ஆண்டு அகில இந்திய அளவில் மிகச் சிறந்து விளங்கியதற்காக கடலூர், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு 2-2-2009 அன்று புதுடில்லியில் விருதுகள் வழங்கப்பட்டன. அதே காரணத்திற்காக 2008-2009 ஆம் ஆண்டு இந்தியாவின் சிறந்த மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்ட நாகப்பட்டினம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு புதுடில்லியில் 2-2- 2010 அன்று இந்தியாவின் சிறந்த மாவட்டங்களுக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாட்டில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்பட வைத்ததற்காக ஈ இந்தியா 2010 எனும் விருது தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்டது.
பொதுமக்களுக்கு மிக நன்கு சேவை செய்ததற்காக கிண்டி கிங் நோய் தடுப்பு மருந்து நிலையத்திற்கு 2010 ஆம் ஆண்டிற்குரிய சிறந்த சேவைக்கான இந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பின் (FICCI) விருது வழங்கப்பட்டது.
சிறுசேமிப்பு திட்டங்களை மிகச் சிறப்பாக செயல் படுத்தியதற்காக 1999 ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் விருது மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களது நிர்வாக திறமையை அங்கீகரித்து லண்டனில் உள்ள அயர்லாந்து பன்னாட்டு பல்கலை கழகம் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கௌரவ டாக்டர் வழங்கி சிறப்பித்தது.
- பேராசிரியர் டாக்டர் சு.கிருஷ்ணசாமி, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் & உலகச் சுற்றுச்சூழல் பேரமைப்பின் முன்னாள் உறுப்பினர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?