DMK
நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ சுற்றுப்பயண தேதி மாற்றம்-தி.மு.க அறிவிப்பு!
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ 6-ம் கட்ட பிரச்சார பயணம் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தி.மு.க தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இதுவரை பல்வேறு மாவட்டங்களில் ஐந்து கட்டங்களாக ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். 6-ம் கட்ட பிரச்சாரத்தை, மார்ச் 8, 9 ஆகிய தேதிகளில் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 6ஆம் கட்ட சுற்றுப் பயணத் தேதி மாற்றப்பட்டுள்ளது. மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் 6-ம் கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்வார் என தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
மேலும், தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் என தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளர்.
தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (5-3-2021, வெள்ளிக்கிழமை) காலை 9 மணி அளவில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.
நாளை நடைபெறும் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மார்ச் 7-ல் திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டம் குறித்து ஆலோசிக்கப்படும்.
அப்போது மாவட்டக் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !