DMK
பேரறிஞர் நினைவுநாள்: காஞ்சியில் தி.மு.கவினர் அமைதி பேரணி.. உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு! (ALBUM)
பேரறிஞர் அண்ணாவின் 52 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் காஞ்சிபுரத்தில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் க.சுந்தர் முன்னிலையில் காஞ்சிபுரம் காந்தி ரோடு பெரியார் தூணிலிருந்து அமைதிப் பேரணியாக புறப்பட்டு காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தை அடைந்தது. இந்தப் பேரணியில் திரளானோர் பங்கேற்றனர். பின்னர் அங்குள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்தப் பேரணியில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், ஆர்.டி.அரசு, எஸ்.புகழேந்தி, மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜோயல், மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன், காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து, விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பிரசாரத்தின் 4 வது கட்ட பயணத்தை காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தில் இருந்து தொடங்கினார். பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் அண்ணா வாழ்க்கை வரலாறு புகைப்படங்களை பார்வையிட்டார். முன்னதாக அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள பதிவேட்டில் உதயநிதி ஸ்டாலின் தனது கையொப்பம் இட்டார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!