DMK
“சர்க்காரியா கமிஷன் அறிக்கை குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?” : அ.தி.மு.கவிற்கு தி.மு.க சவால்!
ஊடகங்கள் நடத்திடும் விவாதங்களில், ஒருசில அ.தி.மு.க.வினர் பங்கேற்று, கலைஞர் அடிக்கடி கூறுவதுபோல், ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்களை திரும்பத் திரும்பக் கூறி வருகின்றனர். 28.1.2021 ‘தந்தி தொலைக்காட்சி’யின் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் பேசிய அ.தி.மு.க. செய்தித்தொடர்பாளர் வாடிக்கையாகக் கூறிடும் பொய்யை திரும்பத் திரும்ப சொன்னபோது, கழகச் செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், ‘அவர் கூறுவது பொய்’ என்றும், அதற்கான ஆதாரத்தை எடுத்துக்காட்டி, அந்த அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளரை திக்குமுக்காடச் செய்ததுமின்றி, அவரை விழிப்பிதுங்கி குழற வைத்த காட்சி பலரும் பார்த்து ரசிக்கத்தக்கதாக அமைந்திருந்தது.
அதன் விவரம் வருமாறு :
நேற்று 28.1.2021 அன்று ‘தந்தி’ தொலைக்காட்சி விவாதத்தில், அ.தி.மு.க சார்பில் பங்கெடுத்த, அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சர்க்காரியா கமிஷனின் ஊழல் குற்றச்சாட்டினால் தான் தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது என்றும், அதில் விஞ்ஞானப்பூர்வமான ஊழல் என்று சொல்லப்பட்டது என்றும் கூறினார்.
அப்போது, தி.மு.க சார்பில் பங்கெடுத்த பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கழக ஆட்சி கலைக்கப்பட்டது ஜனவரி 31, 1976 என்றும், சர்க்காரியா கமிஷன் அமைக்கப் பட்டது பிப்ரவரி 3, 1976 என்றும், தி.மு.க ஆட்சியைக் கலைப்பதற்கு அன்றைய ஆளுநர் கே.கே. ஷா அவர்கள், “தமிழக அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு இயைந்து நடைபெறவில்லை” என்று பரிந்துரைத்து இருந்ததையும், எடுத்துக்கூறியதோடு, “1975, ஜூன் 25-ல், நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது, அந்த ஜனநாயக விரோத செயலை இந்தியாவிலேயே எதிர்த்துக் குரல் கொடுத்த அரசியல் ஆண்மையுள்ள ஓரே தலைவர் கலைஞர்தான்” என்பதையும், அதன் காரணமாகத் தான், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள், தி.மு.க. அரசை கலைத்தார்களே தவிர, இறுதி மூச்சு வரைக்கும் தலைவர் கலைஞர் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டுகூட நிரூபிக்கப்பட்டதில்லை என்பதையும் ஆணித்தரமாக வாதிட்டார்.
அத்தோடு, சர்க்காரியா கமிஷன் அறிக்கையில், “விஞ்ஞானப் பூர்வமான ஊழல்” என்ற வார்த்தை இடம்பெறவே இல்லை என்பதை, இந்து பத்திரிகையின் மூத்த ஆசிரியர் திரு. என். ராம் அவர்கள் எழுதிய, ‘Why Scams are here to stay' என்ற புத்தகத்திலிருந்து எடுத்துக்காட்டினார். அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரிடம், “சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் விஞ்ஞானப்பூர்வஎன இருப்பதை நிரூபிக்கத் தயாரா?” என்று கேட்டபோது, அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் திணறிப்போனார்.
அதோடு, “ஜெயலலிதா குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் சொல்லவில்லை என்றும், அவருக்கு தண்டனை கொடுக்கப்படவில்லை என்றும், அப்படி கொடுத்திருந்தால் நிரூபிக்கத்தயாரா?” என்று அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கேட்டபோது, நாளை, (29.1.2021) காலை 10 மணிக்கு உச்சநீதிமன்ற முத்திரையுடன் கூடிய தீர்ப்பின் பிரதியெடுத்து “ஜெயலலிதா குற்றவாளி” என்றும், அவருக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதையும் ‘தந்தி’ தொலைக்காட்சிக்கு தர நான் தயாராக இருக்கிறேன். அப்படி நான் காலை 10 மணிக்கு தந்துவிட்டால், அந்த அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர், விவாதநிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதை இனி நிறுத்திக் கொள்வாரா?” என்று பேராசிரியர் கான்ஸ்டன்டைன் எதிர் சவால் விட்டார்.
அப்போது அந்த அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர், செய்வதறியாது திகைத்து, திருதிருவென விழித்திக் கொண்டிருந்தாரே தவிர, சவாலை ஏற்க முன்வரவில்லை. எவ்வளவு ஆதாரங்களோடு உண்மைகளை எடுத்து வைத்தாலும் அ.தி.மு.க.வைச் சார்ந்தவர்கள் சொன்ன பொய்களைத் திரும்பத் திரும்பச் சொல்லும் கோயபல்ஸ் வேலையை நிறுத்திக் கொள்வதே இல்லை. இனியாவது, நிறுத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
(இதே அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் இதற்கு முன்பு ஒருமுறை ‘நியூஸ்7’ ஊடக விவாதத்திலும், தி.மு.க.வினர் ‘விஞ்ஞானப்பூர்வ ஊழல் செய்ததாக சர்க்காரியா கமிஷன் கூறியதாக’ தெரிவித்தார். அப்போதும் அந்த விவாதத்தில், தி.மு.க சார்பில் பங்கேற்ற பேராசிரியர் கான்ஸ்டன்டைன், அவரிடம் ‘ஆதாரத்தைத் தரும்படி’ கேட்டபோது, அடுத்து நடைபெறும் விவாதத்தில் காட்டுவதாக கூறிவிட்டுச் சென்றாரே தவிர, இதுவரை அதற்கான ஆதாரத்தை காட்டவில்லை.
“எந்தக் கட்டத்திலும் சர்க்காரியா கமிஷன் தனது தீர்ப்பில் அப்படிக் கூறவில்லை. அப்படி கூறியிருந் தால், அதற்கான ஆதாரங்களை காட்டமுடியுமா?” என்று மீண்டும் மீண்டும் பேராசிரியர் கான்ஸ்டன் டைன் அவரிடம் கேட்டார். ஆனால், ஆதாரத்தைக் காட்டுவதாகக் கூறிச் சென்ற அந்த அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் இதுவரை எந்தவிவாத மேடையிலும் அதற்கான ஆதாரத்தை காட்ட முடியவில்லை என்பது நினைவுகூறத்தக்கது.
Also Read
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!