DMK
எந்த பேரிடரிலும் மக்களை சந்திக்க தவறாத இயக்கம் தி.மு.க; கொரோனா காலம் அதற்கு உதாரணம் : அந்தியூர் செல்வராஜ்
திருப்பூர் மாவட்டத்தில் செல்லுகிற இடமெல்லாம் அருந்ததியர் இன மக்கள் குமுறுகிறார்கள். அ.தி.மு.கவினர் தங்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றதுடன் பொருளாதார சிக்கலில் சிக்கவைத்து தங்களை வஞ்சித்து விட்டதாக குற்றம்சாட்டுகின்றனர். இந்த முறை அவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகும் வகையில் தங்கள் வாக்குகள் அமையும் என அருந்ததியர் இன மக்கள் உறுதி அளித்ததாக தி.மு.க துணை பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் தாராபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
’விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்கின்ற தலைப்பில் திருப்பூர் மாவட்டத்தில் தி.மு.க சார்பில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று காலை திருப்பூர் கிழக்கு மாவட்டத்தின் கொள்ளம்பட்டி, மனக்கடவு, காளிப்பாளையம் உள்ளிட்ட பலவேறு கிராமப் பகுதிகளிலிருந்து, திரண்ட அருந்ததியர் இன மக்களிடம், தி.மு.க துணை பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், தி.மு.க உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்ட தி.மு.கவினர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன், கலந்துகொண்டு அ.தி.மு.க அரசின் அவலங்களை எடுத்துரைத்தார். பேரிடர் காலங்களில் மக்களைச் சந்தித்து நேரில் சென்று அவர்களுடைய பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு இந்த கொரோனா காலம் என்ற அவர், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும்போது தாழ்த்தப்பட்ட ஏழை எளிய மக்கள் அடிப்படை தேவைகள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
பின்னர் பேசிய அந்தியூர் செல்வராஜ், தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் அருந்ததியின மக்கள் அரசின் உயர் பதவிகளை வகித்திடும் வகையிலும் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையிலும் அருந்ததியர் இன மக்களுக்கு 3% உள் இட ஒதுக்கீடு பெற்றுத் தரப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், எவ்வாறு தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமுதாயத்தை நேசித்தாரோ, இந்த சமூகம் மிகப்பெரிய வளர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்தாரோ அதே மாதிரி இன்றைக்கு நம்முடைய கழகத்தின் தலைவர் தளபதி அவர்களும் உயர்ந்த எண்ணத்தில் எங்களை அனுப்பியுள்ளார். எனவே எதிர்வரும் 2021 சட்டமன்ற தேர்த்தலில் மகத்தான வெற்றியினை தி.மு.க பெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவது உறுதி. அப்போது தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்றார்.
பிரச்சாரத்தில் ஈடுபட்ட தி.மு.க நிர்வாகிகளிடம் அருந்ததியர் இன மக்கள், தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பேரிடர் காலத்தில் தாங்கள் மிகவும் பொருளாதார சிக்கலில் அகப்பட்டு உள்ளதாகவும் தமிழக அரசு தங்களை கண்டு கொள்ளாத நிலையே உள்ளது எனவும், ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் தி.மு.க உண்ண உணவு, அரிசி, பருப்பு என மளிகைப் பொருட்கள் ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொடுத்து தங்களுக்கு உதவியதாகவும், தங்களுக்கு பொருளாதார சிக்கலை தீர்த்துக் கொடுக்கவேண்டும் என்றும் நாங்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.கவிற்கு வாக்களிப்போம் எனவும் தெரிவித்தனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?