DMK
சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க, குழு அமைப்பு - தி.மு.க பொதுச் செயலாளர் அறிவிப்பு!
தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க, குழு அமைத்து தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், 8 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கையினைத் தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவினர் விவரம்:
1. டி.ஆர். பாலு, (பொருளாளர்), 2. சுப்புலட்சுமி ஜெகதீசன் (துணைப் பொதுச்செயலாளர்), 3. ஆ.ராசா (துணைப் பொதுச்செயலாளர்), 4. அந்தியூர் ப.செல்வராஜ் (துணைப் பொதுச்செயலாளர்), 5. கனிமொழி, எம்.பி.,(தி.மு.க. மக்களவைக் குழு துணைத் தலைவர்), 6. திருச்சி சிவா, எம்.பி. (கொள்கைப் பரப்புச் செயலாளர்), 7. டி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி. (செய்தித் தொடர்புச் செயலாளர்), 8.பேராசிரியர் அ.ராமசாமி” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !