DMK

தி.மு.க ஆட்சியில் தலைவர் கலைஞரின் திட்டங்களும்.. பள்ளிக்கல்வித் துறையின் மேம்பாடும்..! #TNrejectsNEP

மத்திய மோடி அரசு இந்தியையும், சமஸ்கிருதத்தையும் நாட்டு மக்களிடையே பரப்பும் நோக்கில் புதிய கல்விக் கொள்கை என்ற திட்டத்தை கொண்டு வந்து பெரும் சூழ்ச்சியை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது. இதற்கு நாடெங்கும் உள்ள அரசியல் கட்சியினர், கல்வியாளர்கள் என பல தரப்பினரும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முரசொலி நாளேட்டில் “கலைஞரும் பள்ளிக்கல்வியும்” என்ற தலைப்பில் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோது ஏழை, எளியவர்கள் சுலபமாக பள்ளிக்கல்வியை கற்பதற்காக இயற்றப்பட்ட திட்டங்கள் குறித்து பட்டியலிடப்பட்டுள்ளன.

அவற்றின் விவரம் பின்வருமாறு:-

"எங்கு சுற்றினாலும் ரங்கனை சேர்" என்பது போல, புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் நாம இப்போ மாநில மக்களின் கல்வி உரிமையை மொத்தமாக பறிகொடுத்துவிட்டு நடு ரோட்டில் பரிதாபமாக நிற்போமோ என்ற சூழலில் மனம் என்னவோ தலைவர் கலைஞரை தான் சுற்றி வருகிறது.

காமராஜரை விட அதிகமாக கல்விக்கு அப்படி என்ன தான் செய்திருக்கிறான் உன் தலைவன் என்று கேட்பீர்கள். எல்லாமே அரசு ஆவணமாக இருக்கவே செய்கிறது.

காமராஜர் வலுவான அடித்தளம் இட்டார், கலைஞர் அதன் மேல் ஒரு சாம்ராஜ்யத்துக்கான கட்டுமானத்தையே ஏற்படுத்தியிருக்கிறார்.

1996-2001ல்1) 965 புதிய தொடக்கப் பள்ளிகள் துவக்கம்2) 512 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.3) 380 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.4) 303 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.

2006-11ல்1) 569 புதிய தொடக்கப் பள்ளிகள்2) 2626 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.3) 645 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.4) 570 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.

புதிய கட்டுமானங்கள்1) தொடக்கப் பள்ளிகளில் 30,068 வகுப்பறைகள்2) உயர்நிலை-மேல்நிலைப் பள்ளிகளில் 16,980 வகுப்பறைகள்3) 843 அறிவியல் ஆய்வு கூடங்கள் கட்டப்பட்டன.4) சிவகங்கை, திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திருப்பூர், உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மொத்தம் 18 மாதிரி மேல்நிலைப் பள்ளிகள் திறப்பு, 2010

ஆசிரியர் நியமனங்கள் (1996-2001)1) 41,887 இடைநிலை ஆசிரியர்கள்2) 4046 பட்டதாரிகள்3) 2,916 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்4) 2,270 சிறப்பு ஆசிரியர்கள்5) 238 கல்வி பயிற்சி ஆசிரியர்கள்வேலைவாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை அடிப்படையில் பள்ளிகளில் நியமனம்.

Also Read: “புதிய கல்விக் கொள்கையை இறுதிவரை எதிர்த்து தமிழகத்தின் கல்வி ஒளியை அணையாமல் காப்போம்”: மு.க.ஸ்டாலின் உரை!

ஆசிரியர் நியமனங்கள் (2006-11)1) 12,496 இடைநிலை ஆசிரியர்கள்2) 31,160 பட்டதாரி ஆசிரியர்கள்4) 3002 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்5) 1686 கணினி ஆசிரியர்கள்6) 1131 சிறப்பு ஆசிரியர்கள்7) 525 தமிழ் ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை அடிப்படையில் பள்ளிகளில் நியமனம்.

இது போக 1989-91 ஆண்டு வரை உருவான 943 பள்ளிகளுக்கு 6456 ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆணை, 2011

1991-92க்கு பிறகு உருவான 965 சுயநிதி பள்ளிகளுக்கு அரசு மானிய உதவியுடன் கூடிய 4851 ஆசிரியர்களுக்கும், 648 ஆசிரியர் அல்லாத பிற பணிகளுக்கும் மொத்தம் 5499 பணியிடங்களுக்கான ஆணை, 2011

அரசு பள்ளி மாணவ, மாணவியர் தமிழ் மற்றும் ஆங்கில மொழித்திறனை வளர்த்துக்கொள்ள தமிழ் & ஆங்கில சிறுகதைகள் அடங்கிய புத்தகங்கள் 36 லட்சம் பேருக்கு வழங்கல், 2006-11

7500 தொடக்க & நடுநிலை பள்ளிகளுக்கு 26,900 கணினிகள் வழங்கல், 2006-11

1980 மேல் நிலைப் பள்ளிகளுக்கும், 2131 உயர்நிலை பள்ளிகளுக்கும் 41,110 கணினிகள் வழங்கல், 2006-11

76 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகங்கள், 2007

200 அரசு உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகங்கள், 2010

1500 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி மையங்கள், ஆங்கில மொழி ஆய்வகங்கள், 2010

இப்படி பார்த்து பார்த்து செதுக்கி உருவாக்கிய கட்டமைப்புதான் இன்று மிகப்பெரும் சவாலை எதிர்நோக்கியிருக்கிறது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

- அ.சிவக்குமார். போரூர், சென்னை.

Also Read: புதிய கல்விக் கொள்கை ஏன் அபாயகரமானது? : 2016ம் ஆண்டே இதன் மோசடியை சுட்டிக்காட்டிய முத்தமிழறிஞர் கலைஞர்!