DMK
சமூக சேவகராக மாறிய தி.மு.க மாவட்ட நிர்வாகி : வாழ்த்து மழை பொழியும் நாமக்கல் மக்கள்
கொரோனா ஊரடங்கு தொடங்கிய நாள் முதலே, மாநிலத்தில் உள்ள அனைத்து தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டகளும் தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, அனைத்து மாவட்டச் செயலாளர்களும், தத்தம் பகுதி மக்களின் தேவைகளை அறிந்து நிவர்த்தி செய்து வருகின்றனர். அரசால் செய்ய முடியாததைக் கூட தாமாக முன்வந்து ஏழை எளியோருக்கு தி.மு.கவினர் உதவி வருகின்றனர்.
அதனை தலைவர் மு.க.ஸ்டாலினும் வாரந்தோறும் காணொளி காட்சி மூலம் கழக நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து மாவட்டத்தில் நடக்கும் நடவடிக்கைகளை கேட்டறிந்தும், விசாரித்தும் வருகிறார்.
அந்த வகையில், நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளராக திறம்பட செயல்பட்டு வருகிறார் ராஜேஷ்குமார்.
இவர், அந்த பகுதியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி தொடர்ந்து உதவி செய்து வருகிறார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான மாஸ்க், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியும், வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் பொதுமக்களுக்கான அரசி, எண்ணெய், மளிகைப் பொருட்களையும் வழங்கி வருகிறார்.
இதுபோக, தொழில்நுட்ப அணியின் உதவியோடு, இலவச தொடர்பு எண்ணும் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், மக்களின் அவசர தேவைகளை அறிந்து அனைத்து வகை உதவிகளை மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் ராஜேஷ் குமார் செய்து வருகிறார்.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உதவித் தொகையாக 1000 ரூபாயும் வழங்கி வருகிறார் ராஜேஷ் குமார். இது மட்டுமல்லாமல், தெருவோரம் வசித்து வருவோருக்கு சாப்பாடும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் போன்ற மருத்துவ உபாதைகளால் அவதியுற்று வரும் ஏழை மக்களுக்காக ரூ.4 லட்சத்துக்கு மாத்திரைகளையும் வழங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளியின் மகனான கண்ணன் என்ற சிறுவனுக்கு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாதாமாதம் சென்று டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது ஊரடங்கு காரணமாக வெளியூர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை அறிந்த தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் ராஜெஷ்குமார், சிறுவனை நாமக்கலில் உள்ள மகாராஜா மருத்துவமனையில் சேர்த்ததோடு, சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துக் கொடுத்திருக்கிறார்.
அரசாங்கம் செய்யவேண்டிய அனைத்து உதவிகளையும் அரசியல் கட்சியின் இளம் பொறுப்பாளராக உள்ளவர் செய்து வருவது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் குவித்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!