DMK
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: மு.க.ஸ்டாலினின் பிரசார திட்டம் அறிவிப்பு!
தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் அக்.,21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தி.மு.க சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் புகழேந்தி போட்டியிடுகிறார்.
நாங்குநேரி தொகுதிக்கான வேட்பாளரை இன்று காங்கிரஸ் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இரண்டு தொகுதிகளில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள விவரங்களை தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.
அதில், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் இரண்டு கட்டங்களாக 10 நாட்கள் பரபரப்புரையில் மு.க.ஸ்டாலின் ஈடுபடவுள்ளார்.
விக்கிரவாண்டியில் அக்., 3 மற்றும் 4ம் தேதி முதல்கட்டமாகவும், 12,13,14 ஆகிய தேதிகளில் இரண்டாம் கட்டமாகவும் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளார்.
அதேபோல், நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அக்., 5 மற்றும் 6ம் தேதி முதல்கட்டமாகவும், 17,18,19 ஆகிய தேதிகளில் இரண்டாம் கட்டமாகவும் பரப்புரையில் ஈடுபடவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 46,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?