DMK
பாசிச பா.ஜ.க-வுக்கு எதிராக தி.மு.க தலைமையில் வலுவான அணி : டெல்லியை அதிரவைத்த தி.மு.க!
கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் பிரிவான 370 நீக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றனர்.
காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மக்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக வாழப் பணிக்கப்பட்டுள்ளனர். அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த பாசிச போக்கை பா.ஜ.க தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.
இதனை எதிர்ப்பவர்கள், விமர்சனம் செய்பவர்கள் மீது அனைத்து விதமான அடக்குமுறைகளையும் பா.ஜ.க ஏவி வருகிறது. காஷ்மீரில் நிலவும் இந்த அசாதாரண சூழலைக் கண்டித்து தமிழகத்தில் இருந்து தி.மு.க தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.
இந்நிலையில், காஷ்மீரில் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தலைவர்களை விடுவிக்கக்கோரி தி.மு.க தலைமையில் டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
இந்தப் போராட்டத்தில் தி.மு.க நாடாளுமன்ற எம்.பி.,க்கள் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.,க்கள் மட்டுமில்லாது, ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி உள்ளிட்ட 14 கட்சிகளும் கலந்து கொண்டுள்ளனர். இதில் காஷ்மீர் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனால், டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான தி.மு.க நடத்தி வரும் இந்தப் போராட்டம் தேசிய அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க-வின் பாசிசப் போக்கை கண்டிக்கும் அனைத்து கட்சிகளும் தி.மு.க நடத்தும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளன. இதனால், தேசிய அரசியலில் தி.மு.க முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?