DMK

மத்திய அமைச்சர்களைச் சந்தித்து ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கான கோரிக்கைகளை முன்வைத்த டி.ஆர்.பாலு!

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் தளம் பிரிப்பு மேம்பாலம் (கிரேடு செப்பரேட்டர்) அமைப்புப் பணி, இரு சக்கர வாகனங்களுக்கான தனிப் பாதை, தாம்பரத்தில் தேஜா எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மத்திய அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தி உள்ளார்.

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தல்

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரியை டி.ஆர்.பாலு சந்தித்து கீழ்காணும் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது :

“தமிழகத்தின் மிகப்பெரிய தொகுதிகளில் ஒன்றான எனது திருப்பெரும்புதூர் தொகுதியில்தான், இந்த நாட்டின் மிகப்பெரிய தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றான சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளதை தாங்கள் அறிவீர்கள்.

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பெரும்புதூர் - தாம்பரம் மற்றும் திருப்பெரும்புதூர் -ஒரகடம் சாலைகள் உள்ளன. அப்பகுதி யில் நெருக்கடிப் பிரச்சினைகள் இன்றியும் பாதுகாப்பாக வாகனங்கள் செல்லவும் தளம் பிரிப்பு மேம்பாலம் (கிரேடு - செப்பரேட்டர்)க்கான ஏற்பாடுகள் மிகவும் அவசியமாகும். இதுகுறித்து ஏற்கனவே 16.7.2019 அன்று கடிதம் எழுதியுள்ளேன்.

இது தவிர, திருப்பெரும்புதூர் பகுதியில் தண்டலம் மற்றும் சந்தை வேலூர் என இரண்டு கிராமங்கள் உள்ளன. அங்கு நடைபாதையில் செல்வோர் வாகன நெரிசல்களால் சொல்லொணா துயருக்குள்ளா கிறார்கள். அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் வரும்போதும் போகும் போதும் சாலையைக் கடக்கும்போதும் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

என்னுடைய தொகுதிக்குள் உள்ள இப்பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு தேவைப்படுவதால், இதுகுறித்து பரி சீலித்து, முக்கியத்துவ அடிப்படையில் கீழ்காணும் கோரிக்கைகளை உடனே செய்து முடிக்க இந்திய தேசிய நெடுஞ் சாலைக் குழுமத்திற்கு உத்தரவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் திருப்பெரும்புதூர் - தாம்பரம் மற்றும் திருப்பெரும்புதூர் - ஒரகடம் சாலைகளில் பாதுகாப்போடு பயணம் மேற்கொள்ள ‘கிரேடு செப்பரேட்டர்’ ஏற்படுத்த வேண்டும்.

என்.எச்.48 உள்ள தண்டலம் மற்றும் சந்தை வேலூர் கிராமங்களில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும்.

இது தவிர, எனது தொகுதியில் ஆலந்தூரில் ஆசர்கானா பகுதியில் பொது மக்களுக்கு நடந்து செல்ல சுரங்கப்பாதை இருக்கிறது. ஆனால், அதை யாரும் பயன்படுத்துவதில்லை.

எனவே அதை இரு சக்கர வாகனங் கள் செல்வதற்கேற்றவாறு அமைத்துத் தர இந்திய தேசிய நெடுஞ்சாலைக் குழுமத்திற்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

மேற்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு சந்தித்துப் பேசினார். மத்திய அமைச்சரும், உரிய முறையில் கவனித்து ஆவன செய்வதாக டி.ஆர். பாலுவிடம் உறுதி அளித்தார்.

ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தல்

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலிடம் நேற்று முன்தினம் டி.ஆர்.பாலு கீழ்கண்ட கோரிக்கைகளைக் குறிப்பிட்டு அவைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார்.

தாம்பரம் முனையத்தில் சென்னை - மதுரை தேஜா எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்த ஏற்கனவே ரயில்வே போர்டு தலைவருக்கு மே மாதம் 30 ஆம் தேதி எழுதியுள்ளேன். எனது தொகுதி மக்களுக்கு வசதியாக தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் அந்த தேஜா எக்ஸ்பிரஸ் ரயில் நின்று போக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு அந்த தேஜா எக்ஸ்பிரஸ் ரயில் அங்கே நிற்பதால் மதுரை வரை செல்ல இருக்கும் எனது தொகுதி மக்களுக்கு இலகுவாக இருக்கும் என்பதோடு, தேவையற்ற நெரிசலும் பயண நேரமும் குறையும். எனவே இதைக் கவனித்து ஆவணச் செய்யவும்.

இது தவிர, எனது தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆவடி - திருப்பெரும்புதூர் - கூடுவாஞ்சேரி ரயில் பாதை என்பதாகும். 10 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டாலும், போதிய நிதி ஒதுக்கீடு இன்றி இத்திட்டம் நிலுவையில் உள்ளது.

சென்னைக்கு மேற்குப் பகுதியில் உள்ள மக்கள், சென்னையைத் தொடாமல் செல்லும் இந்த ரயில்களால் பயனடைவார் கள். போக்குவரத்து நெரிசல் குறைய இதன் மூலம் வாய்ப்புள்ளதால், இந்தத் திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

திரிசூலம் - மீனம்பாக்கத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் பணியைத் துரிதப்படுத்த வேண்டும்.

ஆலந்தூரில் (ஏ.ஜி.எஸ்.நிதி பள்ளிக்கு அருகே) நடை மேம்பாலம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும். சென்னை பெருநகர மாநகராட்சி ஏற்கனவே தனது பங்கிற்குரிய செலவுத் தொகையை அளித்து விட்டது.

மேற்காணும் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற, தொடர்புடைய அதிகாரிகளுக்கு உடனே உத்தரவிடக் கோரி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலை நேற்று முன்தினம் டி.ஆர்.பாலு அவர்கள் சந்தித்து வலியுறுத்தினார். அவரது கோரிக்கைகளைக் கேட்ட பின் உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்தார்.