DMK
அண்ணா அறிவாலயத்தில் இன்று கூடுகிறது தி.மு.க. எம்.பிக்கள் கூட்டம்!
மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 38 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தும் வாழ்த்து பெற்றும் வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் இன்று (மே 25) மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர்கள் எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்பர். மேலும் தி.மு.க முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இக்கூட்டத்தில் தமிழக பிரச்சனைகள் குறித்து எவ்வாறு விவாதிக்க வேண்டும், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!