DMK
தமிழகத்தில் கேடுகெட்ட முதல்வர் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது - உதயநிதி ஸ்டாலின் பரப்புரை !
ஒட்டப்பிடாரம் திமுக வேட்பாளர் சண்முகையா ஆதரித்து முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திறந்த வேனில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் ,
"தமிழகத்தில் கேடுகெட்ட முதல்வர் தலைமையில் கேடுகெட்ட ஆட்சி நடைபெறுகிறது. தூத்துக்குடியில் நடந்த மக்கள் போராட்டத்தில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர் இப்படிப்பட்ட மனிதாபிமானம் இல்லாத ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது. பொதுமக்கள் நடத்தும் போராட்டம் தான் தன் ஆட்சியில் சாதனை என்று கூறுகிறார் முதல்வர். இந்த முதல்வர் நாற்காலி மோடி போட்ட பிச்சை.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது இன்னும் மர்மமாக உள்ளது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்று கூறி தர்ம யுத்தம் நடத்திய ஓ.பி.எஸ் தற்போது பதவி கிடைத்ததும் அமைதியாக இருக்கிறார்.
22 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றால் ஜூன் 3 கலைஞர் பிறந்த நாளில் தலைவர் முதல்வராக பதவியேற்பார். திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், விவசாய, கல்வி கடன் ரத்து செய்யப்படும், கேபிள் கட்டணம் குறைவு உள்ளிட்ட அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது." இவ்வாறு கூறினார்
இந்த பிரச்சாரத்தின் போது கே.என்.நேரு, கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், மா.சுப்ரமணியம், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு