DMK
தேர்தல் அலுவலர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் - செந்தில்பாலாஜி குற்றசாட்டு !
அரவக்குறிச்சி தொகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு முன்கூட்டியே அனுமதி பெற்று இருந்த நிலையில் திடீரென திமுக பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சியிடம் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, சட்டமன்ற கொறடா சக்கரபாணி தலைமையில் தி.மு.கவினர் முறையீடு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அரவக்குறிச்சி தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி,
நாளை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இறுதிகட்ட பிரச்சாரத்திற்கு 12 இடங்களில் அனுமதி கேட்ட நிலையில் ஐந்து இடங்களுக்கு மட்டுமே அதிகாரிகள் அனுமதி கொடுத்துள்ளனர். 5 மணி நேரம் காத்திருக்க வைத்து அனுமதி தராமல் போலீசார் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இழுத்தடிக்கின்றனர். தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி 36 மணி நேரத்துக்கு முன்பு அனுமதி தர வேண்டும். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தலைமையிடத்தில் பேசி முடிவு செய்யப்படும்.
அனுமதி மறுக்கப்பட்டது குறித்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதேபோல் மக்களவை தேர்தலின் போதும் நடைபெற்றது. போலீசார் மேலே கேட்டு சொல்கிறோம் என்று நேரத்தைக் கடத்தி என்று இன்று பிரச்சாரம் செய்யாமல் எங்களை இங்கேயே உட்கார வைத்து விட்டனர். இங்குள்ள போலீசார் மற்றும் தேர்தல் அலுவலர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!