Cinema

அரியணையை வெல்லப்போவது அரசனா? அரசியா? : போராட்டங்கள், சூழ்ச்சிகள் - BB வீடு!

விஜய்சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் தொடங்கி 44 நாட்களை கடந்து விட்டது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் மேலும் 6 போட்டியாளர்கள் wild card entry-யாக வீட்டிற்குள் வந்திருந்தனர். இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில், போன வாரம் wild card போட்டியாளராக வீட்டிற்குள் வந்திருந்த ரியா வெளியேறி இருந்தார். அத்துடன் பிக்பாஸ் வீட்டில் போன வாரம் BB Residential School டாஸ்க் நடைபெற்றதன் விளைவாக விஷால் - தர்ஷிகா, பவித்ரா - ராணவ் ஆகியோரிடையே காதல் விவகாரங்களும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் 7-வது வாரத்திற்கான captaincy டாஸ்க் நடைபெற்றது. Lemon on the spoon என்ற இந்த டாஸ்கில் விஷாலும், மஞ்சரியும் போட்டியிட்டனர். இதில் மஞ்சரி வெற்றி பெற்று இந்த வாரத்திற்கான captain ஆக தேர்வு செய்யப்பட்டார். இதன்தொடர்ச்சியாக இந்த வாரத்திற்கான ஷாப்பிங் டாஸ்க் தொடங்கியது. இதில் ஆண்கள் அணி 9000 BB currencyயும், பெண்கள் அணி 11000 BB currencyயும் சம்பாதித்தனர். Shopping task-ல் சுவாரசியத்தை அதிகரிக்க எண்ணிய பிக்பாஸ் போட்டியாளர்கள் Shopping செய்து முடிக்கும் வரை buzzer அடிக்கப்படாது என்று அறிவித்திருந்தார்.

அதிகத் தொகை வைத்திருந்த உற்சாகத்தில் ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் ஷாப்பிங் செய்ய, அது முடிந்தவுடனே buzzer அடிக்கப்பட்டது. ஆனால் இறுதியில் ஆண்கள் அணியினர் 9,180 தொகைக்கும், பெண்கள் அணியினர் 12,040 தொகைக்கும் ஷாப்பிங் செய்தனர். இதில் பெண்கள் அணியில் ஜாம் மட்டும் 6 பாட்டில்கள் எடுத்ததை பார்த்த பிக்பாஸ், ‘are you kidding me?' என்று பெண் அணியினரிடம் கோபமாக கேள்வி எழுப்பிதோடு, தான் கொடுக்கும் பொருட்களை வைத்துதான் இந்த வாரம் சமைக்க வேண்டும் என்றும் கரராக கூறினார்.

தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பெண்கள் அணியினர் சாச்சனாவிடம் கடுமையாக கூறியதால், சாச்சனாவுக்கும் பெண்கள் அணியினருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. அடுத்ததாக nomination process தொடங்க, இந்த வாரம் முத்துக்குமரன், வர்ஷினி, ரயான், ராணவ், சிவகுமார், ஜாக்குலின், ஆனந்தி, விஷால், தர்ஷிகா, பவித்ரா, சாச்சனா, சௌந்தர்யா மற்றும் அருண் ஆகியோர் nominate செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் கேப்டனாக இருந்த அருணுக்கு cape கொடுத்து அதில் 5 stringsயும் கொடுத்து சோதித்தார் பிக்பாஸ். அதே போல இந்த வாரம் கேப்டனான மஞ்சரிக்கும் green badge-கள் வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை 3 badge-கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. captaincy சரியில்லை என்றால் தகுந்த காரணங்களுடன் badge ஐ கேப்டனிடம் இருந்து திரும்ப பெறலாம். அனைத்து badgeகளும் பறிக்கப்பட்டால் கேப்டன் பதவி பறிபோகும் என்பது பிக்பாஸ் அறிவித்தார்.

இதில் முத்து, கேப்டன் மஞ்சரியிடம் இருந்து முதலாவது badge-ஐ பறித்து சென்றார். இரண்டாவது badge-ஐ பறிக்கும் நோக்கில் அடுத்ததாக சாச்சனா வந்தார். ராணவ்விடம் மஞ்சரி பாரபட்சமாக நடந்து கொண்டார் என்றும், ஜெஃப்ரி டாஸ்க் விஷயமாக தான் பேசிய போது மஞ்சரி உள்ளே வந்து தனக்கு இடையூறு செய்தார் என்றும் குற்றம் சாட்டினார். ஏற்கனவே ஒரு badge பறிக்கப்பட்ட நிலையில் மற்றொன்றும் பறிபோவதை பெண்கள் அணியினர் தடுக்க முயன்றனர். இந்த விவாதத்தின் உள்ளே வந்த ஜெஃப்ரி, "இப்பத்தான் கேப்டன் பதவிக்கு வந்திருக்காங்க ஒரு வாய்ப்பு கொடுத்து பாக்கணும்" என்று கூறி மஞ்சரியின் badge-ஐ காப்பாற்றிக்கொடுத்தார்.

இதன் தொடர்ச்சியாக, பிக்பாஸ் வீட்டின் இந்த வாரத்திற்கு ராஜா, ராணி என்ற weekly டாஸ்க் தொடங்கியது. அதாவது 2 ஊருல ஒரு ராஜாவும் ஒரு ராணியும் இருந்தாங்களாம், இரு நாட்டிற்கும் ஒரு பகை இருந்து வருகிறது, எந்த நாட்டவர் எந்த நாட்டை கைபற்றி அரியணையில் அமரப்போகிறார்கள்? என்பது டாஸ்க். இதில், ராஜா, ராணி, ராஜகுரு, படை தளபதி, ஒற்றன், சமையற்காரர், பணியாள், பணிப்பெண், மக்கள் ஆகிய கதாபாத்திரங்கள் இடம் பெற்றிருந்தது.

மேலும், பிரஜைகளாக முத்துக்குமரன், ஆனந்தி, சிவகுமார், ரஞ்சித், அன்ஷிதா, சத்யா, வர்ஷினி, ஜாக்குலின் ஆகியோரும், ஜெஃப்ரி பணியாளராகவும், சௌந்தர்யா பணிப்பெண்ணாகவும், ராஜகுருவாக ரயானும், ராணியின் குருவாக பவித்ராவும், சமையல்காரர்களாக விஷால் மற்றும் தர்ஷிகாவும், படை தளபதியாக தீபக் மற்றும் மஞ்சரியும், இறுதியில் அரசனாக ராணவ் மற்றும் அரசியாக சாச்சனாவும் பிக்பாஸால் அறிவிக்கப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது . பிக்பாஸ் தர்பாரில் ராணி சாச்சம்மா தேவி மற்றும் ராஜா ராணவ் கேசரி ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆண்கள் அணி பெண்களிடம் அனுமதி பெற்று சமைக்க செல்வதில் பிரச்னை ஏற்படுகிறது. ஆண்கள் அணிக்கு சமைக்க செல்ல அனுமதி அளிக்கப்படாது என ராணி கூற மனிதாபிமானமே இல்லாத அரசி என விஷால் கூறுகிறார். இதனால் பிக்பாஸ் வீட்டிற்குள் பிரச்சினை அதிகரிப்பதை கான முடிகிறது. மேலும், பல்வேறு கட்ட போட்டிகள், போராட்டங்கள், சூழ்ச்சிகள் நடைபெறுவதுடன் அரிமா தேசமான ஆண்கள் அணி அரியணையை சொந்தமாக்க இரண்டாவது படியையும் வென்றுள்ளதை காண முடிகிறது.

ஏற்கனவே ஆண்கள் அணி, பெண்கள் அணியின் வீட்டின் பகுதி மாற்றத்தால் சலசலப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் பிக்பாஸ் தர்பாரில் எந்த அணியினர் அரியணையை வெல்லப்போவது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

- சீ. ரம்யா

Also Read: இவர்கள்தான் சாப்பாடு கொடுக்கணும் : ஆர்டர் போட்ட பிக்பாஸ் : இந்த வாரம் வெளியேற போகும் நபர் யார்?