Cinema
இவர்கள்தான் சாப்பாடு கொடுக்கணும் : ஆர்டர் போட்ட பிக்பாஸ் : இந்த வாரம் வெளியேற போகும் நபர் யார்?
விஜய்சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் தொடங்கி 39 நாட்களை கடந்து விட்டது. இந்த நிகழ்ச்சியில் இருந்து போன வாரம் சுனிதா வெளியேறி இருந்தார். இதன் தொடர்ச்சியாக பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான கேப்டனாக அருண் பதவி ஏற்றுக்கொண்டார். கேப்டனுக்கு 5 strings உடன் கூடிய cape ஒன்றை வழங்கிய பிக்பாஸ், கேப்டன் பிக்பாஸ் வீட்டை சரியாக வழிநடத்தவில்லை என்று தோன்றினாலோ, வீட்டில் சுவாரசியம் இல்லை என்று தோன்றினாலோ உரிய காரணத்துடன் போட்டியாளர்கள் strings ஐ எடுக்கலாம். 5 strings-ம் பறிக்கப்பட்டால் கேப்டன் பதவி பறிபோகும் என்றும் அறிவித்திருந்தார்.
இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் டீம் swap நடைபெற்றது. இதில் பெண்கள் அணிக்கு ரயானும், ஆண்கள் அணிக்கு அன்ஷிதாவும் மாறிச்சென்றனர். மேலும், தீபக், சவுந்தர்யா, சிவக்குமார், ராணவ், ரஞ்சித், சத்யா, ஜெஃப்ரி, வர்ஷினி, தர்ஷிகா, மஞ்சரி, ஜாக்குலின், ரியா மற்றும் சாச்சனா ஆகியோர் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் இடம் பெற்றனர். அடுத்ததாக ‘கலர்.. கலர்.. வாட் கலர்’ என்ற இந்த வாரத்திற்கான ஷாப்பிங் டாஸ்க் நடைபெற்றது. இதில், ஆண்கள் அணியினர் 4000 தொகையும், பெண்கள் அணியினர் 8000 தொகையும் சம்பதித்திருந்தனர். ஷாப்பிங் டாஸ்க்கெல்லாம் முடிந்து சாப்பிடும் நேரம் வந்தது.
வெகு நேரமாக பெண்கள் அணியுடன் பேசிக்கொண்டிருந்த அன்ஷிதாவை சாப்பிட அழைக்கவில்லை ஆண்கள் அணியினர். இதுகுறித்து பவித்ரா அன்ஷிதாவுக்கு தெரிவிக்கவே, அவரும் உடனே வந்து என்னை எப்படி மறக்கலாம்? எனக்கு சாப்பாடு வேண்டாம் என விரக்தியில் கூறி சென்றார். இறுதியில் ஆண்கள் அணியினர் அனைவரும் சேர்ந்து அன்ஷிதாவிடம் மன்னிப்பு கேட்டு பிரச்னையை முடிவிற்கு கொண்டு வந்தனர்.
இதையடுத்து, BB Residential School என்ற இந்த வாரத்திற்கான டாஸ்கை அறிவித்தார் பிக்பாஸ். இதில் Moral science teacher-ஆக ஜாக்குலின், தமிழ் அம்மாவாக மஞ்சரி, PET teacher-ஆக ஜெஃப்ரி, வாட்ச்மேனாக சிவக்குமார், Vice principal-ஆக அருண், Principal-ஆக வர்ஷினி மற்றும் வார்டனாகவும் ஜெஃப்ரி பிக்பாஸால் தேர்வு செய்யப்பட்டனர். மற்ற போட்டியாளர்கள் அனைவருமே மாணவர்களாக பங்கேற்க வேண்டும்.
BB School task தொடங்கியது. இதில் முதலாவது வகுப்பை தொடங்கியவர் மஞ்சரி. வகுப்பு தொடங்கிய சற்று நேரத்திலேயே principal வர்ஷினியும், vice principal அருணும் வகுப்பிற்குள் குறுக்கிட்டனர். வகுப்பிற்குள் மாணவர்கள் செய்த கலகம் இது பள்ளி டாஸ்கா அல்லது கல்லூரி டாஸ்கா என்ற குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாகவே இருந்தது. மறுபுறம் coffee powder ஐ திருடி சென்ற ஆனந்திக்கு "திருடறது பிரச்னையில்ல, திருதிருன்னு முழிச்சி மாட்டிக்கக்கூடாது" என தனியாக வகுப்பெடுத்தார் ஜாக்குலின்.
அடுத்ததாக Moral class எடுக்க வந்த ஜாக்குலின், ஏன் பாய்ஸூம் கேர்ல்ஸூம் தனித்தனியா உக்காந்து இருக்கீங்க? என்ற கேள்விகளுடன் தனது வகுப்புகளை தொடங்கினார். இந்த விவாதம் பள்ளி முடிந்து, விடுதி நேர ஆசிரியர்கள் கலந்துரையாடல் கூட்டத்திலும் தொடர, இறுதியில் ஆண்களும், பெண்களும் ஒன்றாக அமரலாம் என principal அறிவித்துச்சென்றார். இந்த டாஸ்கில் விஷால் மற்றும் தர்ஷிகா இடையே ஒரு காதல் கதை, பவித்ரா மற்றும் சத்யா இடையை ஒரு காதல் கதையும் நடந்து வந்தது.
கள்ளக் களவாணியான ஆனந்தி இரவு அனைவரும் உறங்கியவுடன் போட்டியாளர்களின் பொருட்களை ஒளித்து வைக்க தொடங்கினார். இதில் school bell - ஐ கூட ஒளித்து வைத்துவிட்டார். விடிந்ததும் எழுந்து வந்த தீபக், PET sir-இடம் புகாரளிக்க அனைத்து பொருட்களையும் ஒரு வழியாக தேடி எடுத்தார் ஜெஃப்ரி. இதனிடையே nomination free டாஸ்க் நடைபெற்றது, இதில் பெண்கள் அணியினர் வெற்றிபெற்ற்றனர்.
இதையடுத்து தீபக்கிடம் secret டாஸ்க் ஒன்று வழங்கிய பிக்பாஸ் நிர்வாகம் திக்குமுக்காடணும் என்பதை பின்குறிப்பிட்டு சொல்லி இருந்தார். இதற்காக தயாரான மாணவர் அணியினர், பவித்ரா - சத்யா காதல் விவகாரத்தில் ராணவ் குறுக்கிடுவது போன்று தொடங்கி கடுமையாக சண்டையிட்டு கொண்டனர். இருக்கும் அனைத்து ஆசிரியர்களும் சண்டையின் உள்ளே வர, முத்து தலைமையில் மாணவர்கள் போராட்டம் நடந்த பிக்பாஸ் வீடே களேபரம் ஆனது.
இந்நிலையில் டாஸ்க் இறுதி கட்டத்தை எட்டியது. பரீட்சை வருகிறது, காலையில் ஆசிரியர்கள் மாணவர்களை எழுப்ப வேண்டும், PET sir மாணவர்களுக்கு exercise கற்றுக்கொடுக்கலாம், தமிழம்மா அனைவரையும் மன்னிப்பு கடிதம் எழுத வைக்க வேண்டும், குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக ஆசிரியர்கள் மாணவர்களுக்காக perform செய்ய வேண்டும் என பிக்பாஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆசிரியர்கள் மாணவர்களை எழுப்பும்பொழுதே சத்யா வம்பு வழக்க தொடங்கினார். தொடர்ந்து exercise செய்யும் இடத்தில் சத்யா, ராணவ் மற்றும் விஷால் ஆகியோர் PET sir-ஆல் வெளியேற்றப்பட்டனர்.
வழக்கம்போல சலசலப்புடன் தொடங்கிய நிகழ்ச்சியில் குழந்தைகள் தின வாழ்த்து கூறிய ஆசிரியர்கள் மாணவர்களுக்காக perform செய்தனர். இதில் முதலில் principal வர்ஷினி பாட்டு பாட அடுத்து வந்த சிவக்குமார் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போல் நடித்து தனது தனித்தன்மைகளை வெளிப்படுத்தி அசத்தினார், மூன்றாவதாக வந்த தமிழம்மா secret of success பாடலை பிக்பாஸ் வீட்டிற்கு ஏற்றவாறு மாற்றி பாடி மாணவர்களை உற்சாக படுத்தினார்.
இதையடுத்து தர்ஷிகா, விஷால் காதல் விவகாரம் மீண்டும் படையெடுத்தது. இதற்காக மாணவர்களை left, right வாங்கிய principal-ஐ போராடி போராடி sorry சொல்ல வைத்தனர் மாணவர்கள். அடுத்ததாக பள்ளியின் well behave students, well behave இல்லாத students யார் யார் என்று teachers தேர்வு செய்தனர். இதில், முதலாவதாக முத்துக்குமரன், இரண்டாவது சாச்சனா, மூன்றாவது ரயான், இவர்களை தொடர்ந்து ஆனந்தி, ரஞ்சித், அன்ஷிதா, விஷால், பவித்ரா, சௌந்தர்யா, தீபக், தர்ஷிகா, ரியா, சத்யா மற்றும் ராணவ் ஆகியோர் இடப்பெற்றனர். இதில் முதல் மூன்று இடங்களை பெற்ற முத்துக்குமரன், சாச்சனா, ரயான் ஆகியோருக்கு gold, silver, bronze பரிசுகளும், கடைசி இடங்களை பிடித்த ரியா, சத்யா மற்றும் ராணவ் ஆகியோருக்கு imposition-உம் வழங்கப்பட்டது.
இதையடுத்து இன்று வெளியாகி உள்ள பிக்பாஸ் ப்ரோமோவில் இந்த வாரம் முழுவதும் சிறப்பாக பங்கெடுத்துக்கொள்ளாத இரண்டு நபர்களை தேர்ந்தெடுக்கும்படி பிக்பாஸ் கூறுகிறார். இதில், வர்ஷினி மற்றும் ராணவ் ஆகியோர் தேர்ந்தெடுக்க படுகின்றனர். அடுத்த அறிவிப்பு வரும்வரை வீட்டில் உள்ள அனைவருக்கும் சாப்பாடு, தண்ணீர் ஆகியவற்றை இவர்கள்தான் எடுத்துச்சென்று கொடுக்க வேண்டும் என பிக்பாஸ் தெரிவிக்கிறார்.
வார இறுதிநாட்கள் நெருங்கி விட்டதால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வர்ஷினி அல்லது ராணவ் இருவரில் எவரேனும் வெளியேறுவர்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
- சீ. ரம்யா
Also Read
-
”ஆளுநரை நோக்கி கேள்வி எழுப்புங்கள்” : UGC தலைவருக்கு கி.வீரமணி கண்டனம்!
-
அரசு விளையாட்டு போட்டி பேனரில் இஸ்லாமிய சின்னமா?: திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி -TN Fact Check விளக்கம்
-
”கண்ணியத்துடன் பேச வேண்டும்” : சி.வி.சண்முகத்துக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு!
-
மகப்பேறில் குறையும் இறப்பு சதவீதம்... - புள்ளி விவரத்தோடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு !
-
நீர் பயனீட்டாளர்கள் கவனத்திற்கு... 6-வது தேசிய நீர் விருதுகள் 2025 அறிவிப்பு... விண்ணப்பிப்பது எப்படி?