Cinema
நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் புகார்: ஆதாரம் இல்லாததால் FIR-ல் இருந்து பெயர் நீக்கம்... பின்னணி என்ன ?
தென்னிந்திய நடிகர்களில் முக்கியமானவர்தான் நிவின் பாலி. மலையாள நடிகரான இவர், நேரம், ரிச்சி போன்ற தமிழ் மொழி படங்களிலும் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். எல்லாவற்றுக்கும் மேலாக 'பிரேமம்' படத்தின் மூலம் இந்திய திரையுலகில் மேலும் பிரபலமாக அறியப்பட்டார். இவரது அசாதாரண நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தற்போது வரை முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்.
இதனிடையே இவர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் அமைந்துள்ள நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த ஆண்டு பட வாய்ப்பு தருவதாகக் கூறி துபாய் ஹோட்டலில் நிவின் பாலி, தயாரிப்பாளர் ஏ.கே.சுனில் உள்ளிட்ட 6 பேர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் (SIT) புகார் ஒன்றை அளித்தார்.
அந்த பெண் அளித்த புகாரை சிறப்பு புலனாய்வு குழுவினர், அதனை எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஊன்னுக்கல் (Oonnukal) காவல் நிலையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. .
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுக்கு நிவின் மறுப்பு தெரிவித்திருந்தார். என் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் இருந்து நடிகர் நிவின் பாலியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குற்றம் நடந்ததாக கூறப்பட்ட இடத்தில் நிவின் பாலி இல்லை என்பது நிவின் பாலி அளித்த ஆதாரத்தின் பேரில் நிரூபிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
மேலும், அவர் மீது குற்றத்துக்காக எந்தவித ஆதாரமும் இல்லாததால் முதல் தகவல் அறிக்கையில் இருந்து நடிகர் நிவின் பாலியின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையின் பெயரில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!