Cinema

'stop உங்க கதை நல்லா இல்ல' : பிக்பாஸ் வீட்டிற்குள் wild card entry கொடுத்த 6 பேர்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் தொடங்கி 30 நாட்களை கடந்து விட்டது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ரவீந்தர், அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேறி இருந்தனர். இதையடுத்து தீபாவளி போனஸாக No eviction என அறிவிக்கப்பட்டு மேலும் ரியா, ராணவ், வர்ஷினி, மஞ்சரி, சிவக்குமார் மற்றும் ரயான் என 6 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் wild card entry-யாக வந்திருந்தனர்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கேப்டனாக சத்யா தேர்வுசெய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் "கடந்து வந்த பாதை டாஸ்க்" தொடங்கியது. தினமும் 5 போட்டியாளர்கள் வீதம், போட்டியாளர்கள் தங்களின் வாழ்வில் கடந்து வந்த பாதை குறித்து சுவாரஸ்யத்துடன் கூற வேண்டும். இதற்கு புதியதாக வீட்டிற்குள் வந்துள்ள 6 wild card போட்டியாளர்கள் நடுவர்களாக செயல்படுவர்.

இதில், 3 பேர் stop பலகையை உயர்த்தினால் போட்டியாளர் தனது கதையை நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த டாஸ்கை முதலில் துவங்கி வைத்தது ஜெஃப்ரி, தனது தாயின் முக்கியதுவத்தை கூறினார். அவரை தொடர்ந்து சச்சனாவும் தனது திரையுலக பயணத்தின் தொடக்கம் மற்றும் தான் கடந்து வந்த பாதைகளை கூறினார். சச்சனாவின் கதையை ஆர்வமாக கேட்டு முடித்த சக போட்டியாளர்களுக்கு அடுத்து கதை சொல்ல வந்தவர் தீபக். தீபக்கின் கதை பெரிதும் சுவாரசியத்தை ஏறுபடுத்தாததால் பாதியிலேயே stop கூறி நிறுத்தப்பட்டது.

தீபக்கை தொடர்ந்து பேச வந்தவர் விஷால், இவருக்கு முதலில் stop காட்டப்பட்டாலும் இறுதியில் தனது திரை பயணம் மற்றும் தான் கடந்து வந்த பாதைகளை முழுமையாக கூறி முடித்தார் விஷால். இதையடுத்து இறுதியாக பேச வந்தவர் முத்து. தனது பேச்சு திறமையை தெளிவாக பயன்படுத்தி தனது வாழ்வில் கடந்து வந்த பாதைகளை விவரிதித்திருந்தார் முத்து. இதில் பெரிதும் சுவாரசியம் இல்லாத போட்டியாளராக தீபக் தேர்வுசெய்யப்பட்டு அவரிடம் bomb ஒன்றும் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து பிக்பாஸ் வீட்டின் இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில், மற்றவர்களை manipulate செய்யும் நபர்களாக ரியா மற்றும் மஞ்சரியை போட்டியாளர்கள் சுட்டிக்காட்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும், சுலபமாக manipulate ஆகும் நபர்களாக சத்யா மற்றும் ராணவை போட்டியாளர்கள் சுட்டிக்காட்டும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

மேலும், கடந்து வந்த பாதை டாஸ்கில் தனது வாழ்க்கை குறித்து கூறும் அன்ஷிதா, தனது சிறு வயதிலேயே தாயும் தந்தையும் பிரிந்து விட்டதாகவும், செல்லம் தங்கம் என்ற பாச வார்த்தைகளை கேட்க வேண்டிய வயதில் மிகவும் மோசமான வார்த்தைகளையே கேட்டு வளர்ந்தேன் என்றும் தெரிவித்தார். "என்னை யாரும் பின்னாடி இருந்து push பண்ணி ஏறி வரல, ரொம்ப கஷ்ட பட்டுதான் ஏறி வந்துருக்க" என கூறும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

- சீ. ரம்யா

Also Read: பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய தர்ஷா; அடுத்த நாமினேஷனில் இடம் பெறும் சுனிதா...