Cinema
மிஷ்கினின் ‘பிசாசு 2’ படத்திற்கு இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்... காரணம் என்ன?
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் ‘பிசாசு’. ஹாரர் படமான இது, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து பிசாசு படத்தின் இரண்டாம் எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இதில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார்.
பிசாசு 2 படத்தை ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். இந்த சூழலில் இந்த படத்தின் படபிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில், இதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது நீதிமன்றம்.
அதாவது 18+ திரைப்படமான ‘இரண்டாம் குத்து’ படத்தை தயாரித்த ஃபிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் (Flying Horse Pictures) என்ற தயாரிப்பு நிறுவனம், அதன் விநியோக உரிமையை தற்போது பிசாசு 2 பட தயாரிப்பு நிறுவனமான ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் (RockFort Entertainment) நிறுவனத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கியது.
இதற்கான ஒப்பந்தத்தின்படி, ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், ஃபிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.4 கோடியே 85 லட்சத்தில், ரூ.2 கோடி பாக்கி உள்ளது. இந்த மீதித் தொகையை திருப்பி கொடுக்காமல், ‘மன்மத லீலை’, ‘குருதி ஆட்டம்’ உள்ளிட்ட படங்களை ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது.
இதையடுத்து இந்த படங்களுக்கு ஃபிளையிங் ஹார்ஸ் நிறுவனம் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இப்பிரச்சினைக்கு தீர்வு காண மத்தியஸ்தரை நியமித்தது. அதன்படி, விசாரணை நடத்திய மத்தியஸ்தர், ரூ.1 கோடியே 17 லட்சத்து 15 ஆயிரத்து 552 மற்றும் ஜி.எஸ்.டி., ரூ.31 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை ஃபிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு வழங்க, ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.
ஆனால் அந்த தொகையை திருப்பி கொடுக்காமல், மிஷ்கினின் ‘பிசாசு 2’ படத்தை ராக்ஃபோர்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இதனால் மத்தியஸ்தர் பிறப்பித்த உத்தரவின்படி உரிய பணத்தை திருப்பி கொடுக்கும் வரை, ‘பிசாசு 2’ படத்தை வெளியிட தடை கோரி ஃபிளையிங் ஹார்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் வந்த நிலையில், பிசாசு -2 படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த மனுவுக்கு வரும் 18-ம் தேதிக்குள் பதிலளிக்கவும் ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!