Cinema
தூக்கில் தொங்கியவாறு அழுகிய நிலையில் மீட்கப்பட்ட இயக்குநர் உடல்... கன்னட திரையுலகை உலுக்கிய நிகழ்வு!
கன்னட திரையுலகில் பிரபல இயக்குநராக அறியப்படுபவர் குருபிரசாத் (52). ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே இயக்கினாலும், பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். 2009-ம் ஆண்டு Eddelu Manjunatha என்ற திரைப்படத்துக்கு கன்னட மாநில விருதை வென்றார். மேலும், இவர் 2014-ம் ஆண்டு கன்னட பிக் பாஸ் 2-ம் சீசனில் Wild Card போட்டியாளாராகவும் பங்கேற்றார்.
இந்த சூழலில் இவர், பெங்களூரு மதநாயக்கனஹள்ளி என்ற இடத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து, அண்மையில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இதனிடையே அண்மைக்கலாமாக இவரது திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் தோல்வியை தரவே, நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டார்.
மேலும் நிதி பிரச்னை காரணமாக தனது படங்களை பாதியிலேயே நிறுத்தியுள்ளார். தொடர்ந்து தனது நிதி நெருக்கடி, படங்களின் தொடர் தோல்வி உள்ளிட்டவைகளால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த சூழலில் இவரது வீட்டில் இருந்து நேற்று திடீரென துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் வீட்டின் அறையை தட்டி பார்த்துள்ளனர், ஆனால் கதவு திறக்கப்படவில்லை.
இதனால் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில், குருபிரசத்தின் உடல் தூக்கில் தொங்கியவாறு அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரது உடலை மீட்ட போலீசார், உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குருபிரசாத், தற்கொலை செய்த வீட்டில் கடந்த 8 மாதங்களாக வசித்து வந்ததாகவும், தற்போது அவரது இரண்டாவது மனைவி பற்றிய தகவலையும் சேகரித்து வருவதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது குருபிரசாத்த்தின் உயிரிழப்புக்கு கன்னட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!