Cinema
அமரன்: “கற்பனை Super Hero-க்களை பார்த்த குழந்தைகளுக்கு நிஜ Heroவை காட்டுங்கள்” - நடிகர் சிவகார்த்திகேயன்!
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம்தான் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி லைவ் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மறைந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம் பெற்றுள்ள “ஹே மின்னலே...” என்ற பாடல் வெளியாகி, 16 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஈர்த்துள்ளது.
இந்த படம் இன்று (அக்.31) தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் ‘அமரன்’ திரைப்படத்தை முதல் திரையிடலாக நேற்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரத்யேகமாக காண்பிக்கப்பட்டது. இந்த படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசன் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் படக்குழுவினர் இணைந்து படத்தை கண்டனர். தொடர்ந்து இந்த படத்தை முதலமைச்சர் அவர்கள் பாராட்டினார்கள்.
இன்று (அக்.31) இந்த திரைப்படம் வெளியான நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் சென்னை, சத்தியம் திரையரங்கில் 'அமரன்' திரைப்படத்தை ரசிகர்களுடன் கண்டுகளித்தார். திரையரங்கில் இருந்து வெளியே வந்த பின் நடிகர் சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி வருமாறு :
“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (அக்.30) ‘அமரன்’ திரைப்படத்தை பார்த்தார். நல்ல கதையை எடுத்து உள்ளீர்கள் என்றும், அனைவருமே சிறப்பாக நடித்து இருக்கிறார்கள் என்றும் பாராட்டினார். அனைவரது உழைப்பும் இப்படத்தில் தெரிகிறது, .தமிழ்நாட்டில் இருந்து ஒரு மாவீரனின் சாதனையை பற்றி இந்த படத்தில் காண்பித்தீர்கள் என்றார்.
நேரம் ஒதுக்கி படத்தை பார்த்து முதலமைச்சர் அவர்கள் பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. படம் நன்றாக வந்துள்ளது என நடிகர் கமல் தெரிவித்துள்ளார். இப்படத்தில் இருவருடைய வாழ்க்கையை சரியாக பதிவு செய்து இருக்கிறோம் என்று நினைக்கிறேன். படத்தில் பல இடங்களில் மக்களின் கைத்தட்டல்கள் கேட்டது.
இராணுவம் மற்றும் தன்னலமற்ற வேலை செய்யும் அனைவருக்கும் இந்த படம் சமர்ப்பிக்கிறோம். குழந்தைகள் இந்த படத்தை பார்க்க வேண்டும். கற்பனையான சூப்பர் ஹீரோக்களை பார்த்த குழந்தைகள், நிஜத்தில் இப்படிப்பட்ட ஒரு மாவீரன் வாழ்ந்திருக்கிறான் என்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு இந்த படத்தை காட்ட வேண்டும்.” என்றார்.
Also Read
-
தோனியை தக்கவைத்த CSK : 2025 IPL தொடரில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் அணி விவரம்!
-
Mayonnaise விற்பனைக்கு திடீர் தடை விதித்த தெலங்கானா அரசு காரணம் என்ன?
-
தவறை ஒப்புக்கொண்ட ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி! : தொடக்கத்தில் உண்மையை மறுத்தது ஏன்?
-
மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தி.மு.க MLA : நெகிழ்ச்சி சம்பவம் என்ன?
-
'ஜெய் ஸ்ரீராம்' கோசமெழுப்ப மறுத்த பெண் : மருத்துவமனையில் மறுக்கப்பட்ட உணவு : வீடியோ வெளியாகி அதிர்ச்சி !