Cinema
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!
தீபாவளிக்கு ஆண்டுதோறும் புதுப்படங்கள் வெளியாவது வழங்கம். இந்த வகையில் நாளை மூன்று திறைப்படங்கள் வெளியாகிறது.
1. அமரன்:-
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள 'அமரன்' திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி லைவ் இணைந்து தயாரித்துள்ளது. இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படம், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஹே மின்னலே என்ற பாடல் வெளியாகி,16 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. பாடல்கள் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது போல் அமரனும் மக்கள் மனதில் இடம் பிடிக்குமா என்பது நாளை தெரிந்துவிடும்.
2.பிரதர் :-
சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்கள் இயக்கிய எம்.ராஜேஷ் இயக்கத்தில் அடுத்து உருவாகி வரும் படம்தான் 'பிரதர்'. ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார், ஸ்க்ரீன் சீன் மீடியா தயாரித்துள்ளது. இப்படம் நாளைக்கு வெளியாகிறது.
3.பிளடி பெக்கர் :-
தமிழில் தற்போது முக்கிய நடிகராக வலம் வரும் கவின் நடிப்பில் உருவாகி வரும் படம்தான் 'பிளடி பெக்கர்'. நெல்சன் திலீப்குமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சிவபாலன் இயக்கத்தில் உருவாக்கி நாளை வெளியாகிறது.
இந்த மூன்று படத்தில் எந்தப்படம் சரவெடியாக வெடிக்கப்போகிறது, அது புஸ் என்று போகபோகிறது என்பது நாளை தெரிந்துவிடும்.
Also Read
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
-
உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றியது ரஷ்யா : போரில் தொடரும் ரஷ்ய ஆதிக்கம் !
-
மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
-
விருதுநகர் மாவட்டத்தில் 2 பேரூராட்சிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!