Cinema
ரவீந்தரை தொடர்ந்து இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர் யார்? - பரபரப்பாகும் பிக்பாஸ் வீடு!
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் தொடங்கி ஒருவாரத்தை கடந்து விட்டது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் முதல் நாளே போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு சாச்சனா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சி Men vs Women என்ற theme-உடன் தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சுவாரசியத்தை அதிகரிப்பதற்காக ஆண்கள் அணியில் இருந்து ஒரு நபரையும் பெண்கள் அணியில் இருந்து ஒரு நபரையும் மாற்று அணிக்கு அனுப்பிவைத்தார் பிக்பாஸ். இதில் முத்துக்குமரனும், பவித்ராவும் அணிமாறி சென்றிருந்தனர். இந்த ஒரு வார நிகழ்ச்சியில் சற்று சுவாரசியத்தை அதிகரிக்க செய்த இரண்டு விஷயங்கள் ஒன்று ஆண்கள் அணியினர் ஏற்படுத்திய ஆடிய Prank Show, மற்றொன்று "நம்பிக்கைக்கு உரியவர்கள் ஆண்களா, பெண்களா?" என்ற தலைப்பில் இரு அணியினருக்கு இடையை நடைபெற்ற விவாதங்கள்.
இதில் prank show-விற்கு மூளையாக இருந்த போட்டியாளர் ரவீந்தர், தனது திட்டத்திற்கு ரஞ்சித்தையும் துணையாக சேர்த்துக்கொண்டார். ஆண்கள் அணியின் திட்டப்படி, ஆண்கள் அணியில் இருந்த பவித்ரா, வசந்திடம் தனது சண்டையை ஆரம்பிக்க, இந்த சண்டையின் நடுவே வந்த ரவீந்தரும், ரஞ்சித்தும் ஆக்கிரோஷமாக சண்டையிட்டுக் கொண்டனர். இந்த பிரச்னையை உண்மை என்று எண்ணிய பெண்கள் அணியினர், இவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் இறுதியில் ரவீந்தரும், ரஞ்சிதும் ஒன்று சேரவே இது ஒரு prank என பெண்களுக்கு தெரிய வந்தது. இந்த prank-கிற்கு பவித்ராவும் துணை சென்றதை ஏற்றுக்கொள்ள முடியாத பெண்கள் அணியினர் பவித்ராவை கடிந்துகொண்டனர்.
இதையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரிதும் கவனத்தை ஈர்த்தது, "நம்பிக்கைக்கு உரியவர்கள் ஆண்களா, பெண்களா?" என்ற தலைப்பில் நடந்த விவாதம். இதற்கு பெண்கள் தரப்பில் முத்துக்குமரனும், ஆனந்தியும் தங்களது கருத்துகளை மிகவும் தெளிவாக விவரித்திருந்தனர். அதே போல ஆண்கள் தரப்பில், ரவீந்தரும், வசந்தும் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். இதே போல "பெற்றோர்களில் சிறந்தவர்கள் யார்" என்ற தலைப்பிலும் ஒரு விவாதம் நடந்தது. இதற்கு பெண்கள் தரப்பில், ஜாக்குலினும், அன்ஷிதாவும், ஆண்கள் அணியில் அருண் பிரசாத் மற்றும் அர்னவ் ஆகியோர் பேசுவதற்காக தேர்வு செய்யப்பட்டனர். இந்த இரு தலைப்பிலும் வெற்றிபெற்றது பெண்கள் அணியே.
நிகழ்ச்சி வார இறுதி நாட்களை நெருங்கியவுடன் போட்டியாளர்களுக்கு 'விடுதலை பாஸ்' வழங்கப்படவுள்ளதாக பிக்பாஸ் அறிவித்தார். இதிலும் பெண்கள் அணியில் குழப்பம் சண்டையென இறுதி வரை ஒருவரை தேர்வு செய்ய முடியாமல் தவித்தனர். ஆனால் ஆண்கள் அணியோ அருண் பிரசாத்தை தேர்வு செய்தனர்.
இதனிடையே பிக்பாஸ் சீசன் 8 தொடங்கிய முதல் நாளே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்த சாச்சனா நிகழ்ச்சிக்குள் போட்டியாளராக மீண்டும் வந்திணைந்தார். "வெளில இருந்து எல்லாத்தையும் பார்த்துட்டுதான் வந்திருக்கேன்" என தனது பேச்சை தொடங்கிய சாச்சனா, ஆண்கள் அணியில் ரஞ்சித், சத்யா, விஷால் ஆகியோர் week contestants என்றும், பெண்கள் அணிக்கிட்ட நான் தனியா பேசுகிறேன் என்றும் கூறி பெண்களை அழைத்துச்சென்றார். ஆண்கள் அணியில் இருக்கும் ஒற்றுமை பற்றியும், பெண்கள் அணியில் ஒற்றுமையே இல்லை என்பதையும் பெண்களிடம் விவரித்திருந்தார்.
சில பல சண்டை சச்சரவுகளுடன் வாரத்தை கடத்தி சென்ற போட்டியாளர்களை வார இறுதி நாட்களில் சந்தித்தார் தொகுப்பாளர் விஜய் சேதுபதி. போட்டியாளர்களிடம் விஜய் சேதுபதியின் அணுகுமுறை சற்று மாறுபட்ட விதத்திலேயே அமைத்திருந்தது. "Entertainment இல்ல, Go with the flow னு இருக்குற மாதிரி இருக்கு" என போட்டியாளர்கள் குறித்த தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார் விஜய் சேதுபதி.
மேலும், தொடக்கத்திலேயே அனைவரையும் "உட்கார்ந்தே பதில் சொல்லுங்க நிக்க வேண்டாம்" என தனது கேள்விகளை தொடங்கினார். போட்டியாளர்களிடம் இந்த வாரம் எப்படி சென்றது என்ற தனது விசாரணையை தொடங்கிய விஜய் சேதுபதி, "Show உள்ள வந்தும் நீங்க ரிவ்யூவராத்தான் இருக்கீங்க" என ரவீந்தரிடம் சுட்டிக்காட்டினார்.
போட்டியாளர்களின் நிறை குறைகளை தெளிவாக சுட்டிக் காட்டிய விஜய் சேதுபதி, அதிகம் கவனம் செலுத்திய பகுதி prank தான். Prank-ன் இறுதியில் ஆண்கள் அணியினரும் ரவீந்தர் மீதே முழு பிரச்னையை திருப்பி விட்டதை தெளிவுபடுத்தி விளக்கினார் விஜய் சேதுபதி. Prank செய்தது nomination-காகத்தான் என தங்களுக்கு தெரியாது என்பதே பெரும்பாலான ஆண்களின் குற்றச்சாட்டாக இருந்தது. இதில் நேரடியாக பாதிக்கப்பட்ட ரஞ்சித்தும் தனக்கு nomination பற்றி தெரியாது என்ற கூறி வந்தார். ஆனால், இதை தெளிவுபடுத்திய விஜய் சேதுபதி, "இப்போதான் ஒரு குறும்படம் பாத்துட்டு வந்தே" என்று கூறியதுடன், அதில் nomination ல நீங்களும் நானும் இருக்கோம் இதுக்கு ஒரு prank பண்ணலாம் என தனது உரையை ரவீந்தர் தொடங்கி இருந்ததை போட்டியாளர்கள் மத்தியில் தெளிவு படுத்தினார்.
"பெரியவங்க சொல்லும்போது கேட்டுகோங்க அப்புறம் உங்க கருத்த முன்வவையுங்க" என ஜெஃப்ரிக்கு அறிவுரை கூறிய விஜய் சேதுபதி, "ஆண்கள் ஒற்றுமையை இருக்குறத பாக்க நல்லாத்தான் இருக்கு..., ஆனா ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் ஒளிஞ்சிக்குறா இருக்கு, அது உங்களுக்கு தோணுதா?" என கேள்வி எழுப்பினார். நீங்க நிறைய bore அடிக்குற வேலைய செய்யுறீங்க, உங்களுக்கு அது தெரியலையா, Host வச்சி show இல்ல, contestant வச்சிதான், என போட்டியாளர்களிடம் தனது கருத்துகளை அடுத்தடுத்து முன்வைத்தார்.
பிக்பாஸ் சீசன் 8-ல் ஆண்கள் அணி ஒற்றுமையாகவும், பெண்கள் அணியில் ஒற்றுமை இல்லை என்று மட்டுமே இருந்த பிம்பத்தையும் உடைத்த விஜய் சேதுபதி, அடுத்து வரும் வாரங்களில் "ஆண்கள் ஒற்றுமையில் இருக்கும் தனித்துவத்தை தேடுங்கள் என்றும், பெண்கள் தனித்துவத்தில் இருக்கும் ஒற்றுமையை தேடுங்கள்" என்றும் கூறினார்.
மேலும் நாமினேஷனில் ஜாக்குலின், ரவீந்தர், அருண் பிரசாத், சவுந்தர்யா, முத்துக்குமரன், மற்றும் ரஞ்சித் ஆகிய 6 பேர் இடம்பெற்றிருந்த நிலையில், நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தரன் வெளியேற்றப்பட்டார். போட்டியாளர்களிடம் நேரடியாக விஜய் சேதுபதி குறைகளை சுட்டி காட்டிய விதம் அடுத்து வரும் நாட்களில் போட்டியை மேலும் சுவாரசியம் ஆக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, பிக்பாஸ் வீட்டின் இன்றைய நிகழ்ச்சியில் இரண்டாவது வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் நடைபெறுகிறது. இதில் ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் நாமினேட் செய்ய வேண்டும். இதில், ஜெஃப்ரி, ரஞ்சித், சௌந்தர்யா, சாச்சனா ஆகியோர் நாமினேஷனில் இடம் பெரும் காட்சிகளை பார்க்க முடிகிறது.
- சீ. ரம்யா
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!