Cinema
பிக்பாஸ் சீசன் - 8 : நம்பிக்கைக்குரியவர்கள் யார்? ஆண்களா, பெண்களா!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கியது. கடந்த 7 சீசன்களாக கமல் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியை இந்த முறை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். எனவே, இந்த முறை நிகழ்ச்சி மாறுபட்ட விதத்திலும், விறுவிறுப்பாகவும் இருக்கும் என மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது. "வெளிய நாம யாரா வேணா இருக்கலாம் எவளோ பெரிய ஆளா வேணா இருக்கலாம், ஆனா இந்த வீட்டுக்குள்ள வந்துட்டா இந்த வீட்ல ஒரு ஆளுதான் . இங்க மேலே, கீழ, கருப்பு, வெள்ளை எந்த பாகுபாடுமே கிடையாது, அப்டி யாருக்காவது இருந்துச்சுன்னா எல்லாரும் ஒன்னுதானு இந்த வீடு புரிய வச்சிரும்னு நா நம்புறேன்" என்ற வாசகங்களுடன் தொடங்கி, நிகழ்ச்சியின் துவக்கத்தில் பிக்பாஸ் வீட்டை சுற்றி காட்டினார் விஜய் சேதுபதி.
கடந்த முறையே பிக்பாஸ் வீடு பிக்பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தது. அதே போல இந்த முறையும் அற்புதமாகவும் அழகாகவும் வடிவமைக்கப்பட்டிருந்த இந்த வீட்டின் நடுவே வெள்ளை கோடு ஒன்று போடப்பட்டு வீடு இந்த முறையும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதி அதிக வசதிகளைக் கொண்டதாகவும், மற்றுமொரு பகுதி வசதிகள் குறைந்ததாகவும் அமைக்கப்பட்டிருந்தது.
பிக்பாஸ் சீசன் 8-ல், ரவீந்திரன், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்.ஜே.ஆனந்தி, சுனிதா, ஜெஃப்ரி, ரஞ்சித், பவித்ரா, சவுந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, வி.ஜே. விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் என 18 போட்டியாளர்கள் வீட்ற்குள் சென்றனர். மேலும் இந்த நிகழ்ச்சி Men vs women என்ற theme-உடன் தொடங்கப்பட்டது. இதில் முதலில் உள்ளே வந்த 6 போட்டியாளர்களுக்கு ஆண்கள் எந்த பகுதி, பெண்கள் எந்த பகுதி என முடிவு செய்து கூற வேண்டும் இல்லையென்றால் அனைவரும் வீட்டிற்கு வெளியேதான் தூங்க வேண்டும் என பிக்பாஸ் ட்விஸ்ட் வைத்தார். இதனால் பதறி போன போட்டியாளர்கள் தங்களது தரப்பில் என்ன என்ன தேவை என கலந்துரையாடி இறுதியில் ஒரு முடிவிற்கு வந்தனர். அதில் பெண்கள் தனி தனி படுகைக்கொண்ட வசதியான பகுதியையும், ஆண்கள் வசதி குறைந்த பகுதியையும் தேர்வு செய்துகொண்டனர்.
ஆனால் இதற்கு ஆண்கள் தரப்பில் எதாவது ஒரு வாரம் பெண்கள் யாரும் ஆண்களை nomination செய்ய கூடாது என்ற ஒரு நிபந்தனையை விதிக்க அங்கு இருந்த பெண்கள் அதனை ஒரு மனதாக ஏற்றுக்கொண்டனர். ஆனால் அதன் பின்னர்தான் பிரச்சனையே தொடங்கியது. பிக்பாஸ் வீட்டிற்குள் அனைத்து போட்டியாளர்களும் வர, இரு அணியினரும் புதிதாக வந்தவர்களிடம் பகுதி பிரித்து முதல் Nomination Condition வரை தெளிவாக விளக்கம் அளித்தனர். அனால் இறுதியாக வீட்டிற்குள் வந்த ஜாக்குலின் தனக்கு எந்த வசதியும் வேண்டாம் என்னால் இந்த நிபந்தனை ஏற்றுக்கொள்ள முடியாது என குரல் எழுப்பின்னர். இதனிடையே போட்டியாளர்களை சந்தித்த விஜய் சேதுபதி... 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற போவதாக அடுத்த அதிர்ச்சி தகவல் ஒன்றை அறிவித்து சென்றார்.
24 மணி நேரத்திற்குள் யார் வெளியேற போவது என்ற எதிர்பார்ப்பு வீட்டிற்குள் அதிகரிக்க தொடங்கியது. அதற்கேற்ப 'இந்த ஆட்டத்தில் நீடிப்பதற்கு நான் தகுதியான ஆள்’ என்ற தலைப்பில் ஒவ்வொருவரும் பேச வேண்டும் என போட்டியாளர்கள் தங்களுக்குள் பேச தொடங்கினர். இதில் தங்களுக்கு வீட்டிற்குள் இருக்க என்ன தகுதி உள்ளது என்பதை ஒருவ்வொரு போட்டியாளர்களும் விவரிக்க, பெண்கள் அணி வீட்டின் பகுதியை தேர்வு செய்யும் பொழுது நானும் அதில் இருந்தேன், எனவே வெளியே போக நான் தயார் என தானாக முன் வந்தார் இளம் போட்டியாளரான சஞ்சனா. இதை கேட்ட சக போட்டியாளர்கள் 'நீ சின்னப்பொண்ணு, இது போல பேச கூடாது' என அறிவுரை கூறி விட்டு இறுதியில் சஞ்சனாவையே nominate செய்து முதல் நபராக வீட்டை விட்டு வெளியே அனுப்பினர்.
இதையடுத்து "நாற்காலி யார் காலி" என்ற தலைப்பில் கேப்டன்சி டாஸ்கை ஆரம்பித்தார் பிக்பாஸ். இதில் ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் மோதிக்கொள்ள, பெண்கள் அணியிலிருந்து தர்ஷிகா ஒருவழியாக கேப்டனாக தேர்வானார். இதையடுத்து, இந்த வாரத்திற்கான நாமினஷன் தொடங்கியது. இதில் ஜாக்குலின், ரவீந்திரன், அருண் பிரசாத், முத்துக்குமரன், சவுந்தர்யா மற்றும் ரஞ்சித் ஆகியோர் முதல் வார எவிக்க்ஷன் லிஸ்டில் இடம் பெற்றனர்.
ஆண்கள், பெண்களை தனி தனியாக பிரித்து வைத்து வம்பு வழக்கை முதல் நாளே தொடங்கி இருந்த பிக்பாஸ்... இரண்டு நாட்களில் ஆண்கள் அணியில் இருந்து பெண்கள் அணிக்கு ஒருவரும், பெண்கள் அணியில் இருந்து ஆண்கள் அணிக்கு ஒருவரும் செல்ல வேண்டும் என்ற தனது அடுத்த கட்ட அட்டதை ஆரம்பித்தார். அணி மாறிச்செல்லும் இருவருக்கும் direct nomination செய்யும் வாய்ப்பு உண்டு என்று அறிவிக்கப்பட்டது.
ஆண்கள் அணியில் எந்தவொரு சச்சரவும் இல்லாமல் முத்துக்குமரனை ஒருமனதாக தேர்வு செய்து அனுப்பி வைத்தனர். ஆனால் பெண்கள் அணியில் ஜாக்குலின் நான் செல்கிறேன் என தொடங்க அது தர்ஷா குப்தா, பவித்ரா என மாறி மாறி பெரிய களேபரம் நிகழ்ந்தது. 'அங்க போறவங்க பாவமா மூஞ்சை வெச்சுக்கணும்' என்றதில் தொடங்கிய பிரச்சனை ஜாக்குலின், பவித்ராவுக்கு இடையே பெரும் சச்சரவை ஏற்படுத்தியது. இறுதியில் ஆண்கள் அணியில் இருந்து முத்துக்குமரனும், பெண்கள் அணியில் இருந்து பவித்ராவும் அணி மாற தேர்வாகினர்.
இதன் தொடர்ச்சியாக, இரு அணியினரும் தனித்தனியாக சமையல் செய்ய வேண்டும் என்ற அறிவிப்புடன், இந்த வாரத்திற்கான ஷாப்பிங் டாஸ்கை அறிவித்தார் பிக்பாஸ். இரு அணியினரும் தலா ரூ.13,500 மதிப்புள்ள பொருட்கள் வரை ஷாப்பிங் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இதில் ஆண்கள் அணி ரூ.5,490 மற்றும் பெண்கள் அணி ரூ.6,010 மதிப்புள்ள பொருட்களை ஷாப்பிங் செய்தனர். அதிலும் குறிப்பாக ஆண்கள் அணிக்கு உப்பு இல்லாமல் போனது.
இதையடுத்து, இரு அணியினரும் தங்களின் விதிமுறைகளை விவரிக்கத் தொடங்கினர். இதில் பெண்கள் அணியினர், ஆண்கள் கன்ஃபெஷன் ரூமிற்கு வர வேண்டும் என்றால் ஒரு வாரத்திற்கு அவர்களை நாமினேட் செய்யக்கூடாது என்ற நிபந்தனையை திரும்ப பெற வேண்டும் என்று கூறினார். அதே போல ஆண்கள் அணியினரும், சமையல் பொருட்களை எடுக்க அனுமதி பெற வேண்டும், தண்ணீர் வேண்டும் என்றால் ரவீந்தரிடம் அனுமதி பெற வேண்டும், ரவீந்தருக்கு தேவைப்பட்டால் பெண்கள் வீட்டில் அமரலாம், என அவர்கள் தரப்பிலான விதிகளையும் அறிவித்தனர்.
நிகழ்ச்சி தொடங்கிய 2 நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டில் பிரச்சனைகள் தலைவிரித்தாட தொடங்கியது. ஆண்கள் அணியில் சமையலுக்கு விட்டு போன உப்புக்காக அடுத்த ஒரு விவாதம் தொடங்கியது. 'உப்பு தர மாட்டோம்' என பெண்கள் கூக்குரல் எழுப்ப, 'சமையல் பொருட்கள் எதையும் கொடுக்க மாட்டோம்' என்றனர் ஆண்கள் அணியினர். எனினும் இறுதியில் உப்பு பிரச்சனை உப்பு சப்பு இல்லாத பிரச்னையாக முடிந்தது.
பிக்பாஸ் வீட்டின் இன்றைய நிகழ்ச்சியில் 'போட்டா போட்டி' என்ற weekly task வழங்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த டாஸ்கில் "நம்பிக்கைக்குரியவர்கள் யார் ஆண்களா, பெண்களா" என்ற தலைப்பில் போட்டியாளர்கள் விவாதிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. பெண்கள் அணியில் இருந்து பேசும் முத்துக்குமரன் ஒரு ஆண் அவனுடைய எல்லா பிரச்சனைக்கும் தேடி போகுற ஒரு ஆள்? என பேச, அதை தொடர்ந்து பேசும் ஆனந்தி, சிரிச்சி பேசினாத நா இந்த ரூம விட்டு வெளிய போக முடியும்னா நா சிரிச்சிட்டு போவான், உங்கள நம்பி நா சிரிச்சனு சொல்லவே மாட்டேன் என பேச, அதற்கு தவறை நியாய படுத்துவது நியாயமல்ல, எவ்வளவு வேன இதுல brand பண்றதுக்கு நீங்க try பன்னிங்கன்னா இந்த வாதம் விவாதத்துக்கு உரிய வாதமாவே வராது என ரவீந்திரன் பேசும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
முத்துக்குமரன் மற்றும் பவித்ரா அணி மாரி உள்ளதும், ஆண்கள் பெண்கள் தலைப்பில் இடம் பெரும் விவாதங்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாக்குமா என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
- சீ. ரம்யா
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!