Cinema

70-வது தேசிய திரைப்பட விழா : சிறந்த படம் முதல் இசை வரை... அதிக விருதுகளை பெறும் ‘பொன்னியின் செல்வன்’ !

ஆண்டுதோறும் இந்திய திரைப்படங்களையும், கலைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக இந்திய திரை படைப்புகளுக்கு இந்திய அரசால் தேசிய விருது வழங்கப்படுகிறது. இதற்கு ஒவ்வொரு ஆண்டும் அரசால் நியமிக்கப்படும் தேசிய தேர்வுக்குழு இதனை தேர்ந்தெடுக்கிறது. அவ்வாறு தேர்ந்தெடுக்கும் திரைப்படமானது தேசிய திரைப்பட விழாவில் பொதுமக்களுக்காக திரையிடப்பட்டு வருகிறது.

கடந்த 2020-ம் ஆண்டும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. மேலும் இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகையாக அபர்ணாவுக்கும், சிறந்த இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷுக்கும், திரைக்கதை எழுதிய சுதா கொங்கராவுக்கும் அறிவிக்கப்பட்டது. மொத்தத்தில் 'சூரரை போற்று' திரைப்படத்திற்கு, "சிறந்த நடிகர், நடிகை, திரைக்கதை, இசை, படம்" என 5 தேசிய விருதுகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து 2021-ம் ஆண்டுக்கான தமிழில் சிறந்த படமாக மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த 'கடைசி விவசாயி' படத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் நடித்த மறைந்த ஸ்ரீநல்லாண்டிக்கும் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2022-ம் ஆண்டின் சிறந்த படத்துக்கான விருது அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (அக்.08) டெல்லியில் 70-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் பான் இந்தியா படமாக வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மட்டும் சிறந்த படம், சிறந்த ஒளிப்பதிவு (ரவிவர்மன்), சிறந்த பின்னணி இசை (ஏ.ஆர்.ரஹ்மான்), சிறந்த ஒலிப்பதிவு (ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி) ஆகிய பிரிவுகளில் 4 விருதுகளை வென்றுள்ளது.

அதே போல் சிறந்த நடிகைக்கான விருதை தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்ததற்காக ‘நித்யா மேனன்' பெறுகிறார். மேலும் சிறந்த நடிகராக ரிஷப் ஷெட்டி (காந்தாரா), சிறந்த சண்டைப் பயிற்ச்சிகான விருது அன்பறிவு (கே.ஜி.எஃப் -2) ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது. அதோடு இதில் சிறந்த நடன இயக்குநருக்கான விருது திருச்சிற்றம்பலம் படத்தின் “மேகம் கருக்காதா...” பாடலுக்காக ஜானி மாஸ்டர் மற்றும் சதீஷ் கிருஷ்ணன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், போக்ஸோ வழக்கில் கைதான ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட விருதை திரும்பப்பெற்றது தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுகள் பெறப்போகும் திரைப்படம் முதல் நடிகர்கள் வரை பட்டியல் :

=> சிறந்த படம் :

Attam (மலையாளம்)

=> சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் :

காந்தாரா (தெலுங்கு)

=> சிறந்த இயக்குநர் :

சூரஜ் ஆர் பர்ஜாத்யா (Uunchai)

=> சிறந்த நடிகர் :

ரிஷப் ஷெட்டி ( காந்தாரா)

=> சிறந்த நடிகை :

நித்யா மேனன் ( திருச்சிற்றம்பலம்)

=> சிறந்த துணை நடிகர் :

பவன் ராஜ் மல்ஹோத்ரா (Fouja)

=> சிறந்த துணை நடிகை :

நீனா குப்தா (Uunchai)

=> சிறந்த குழந்தை நட்சத்திரம் :

ஸ்ரீபத் (Malikappuram)

சிறந்த ரீஜனல் திரைப்படங்கள் :

=> சிறந்த தமிழ் திரைப்படம் :

பொன்னியின் செல்வன் பாகம் 1 (இயக்குநர் - மணிரத்னம்)

=> சிறந்த கன்னட திரைப்படம் :

கே.ஜி.எஃப் - 2 (இயக்குநர் - பிரசாந்த் நீல்)

=> சிறந்த மலையாள திரைப்படம் :

Saudi Vellakka CC.225/2009 (இயக்குநர் -தருண் மூர்த்தி)

=> சிறந்த தெலுங்கு படம் :

Karthikeya 2 (இயக்குநர் - சந்தூ மொண்டேடி)

=> சிறந்த இந்தி திரைப்படம் :

Gulmohar (இயக்குநர் - ஷர்மிளா தாகூர்)

=> சிறந்த குஜராத்தித் திரைப்படம் :

Kucth Express (இயக்குநர் - பிரோமோத் குமார்)

=> சிறந்த மராத்தி திரைப்படம்:

Vaalvi

=> சிறந்த பெங்காலி திரைப்படம் :

Kaberi Antardhan

=> சிறந்த பஞ்சாபி திரைப்படம் :

Baghi Di Dhee

=> சிறந்த திவா திரைப்படம் :

Sikaisal

=> சிறந்த ஒடியா திரைப்படம் :

Daman (இயக்குநர்கள் விஷால் மௌரியா, லெங்கா தேபிபிரசாத்)

=> சிறந்த அசாமி திரைப்படம் :

Emuthi Puthi (இயக்குநர் - Kulanandini Mahanta)

தொழில் நுட்ப விருதுகள்

=> சிறந்த இசையமைப்பாளர் ( பாடல்கள்) :

ப்ரீதம் (Brahmastra)

=> சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை) :

ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின் செல்வன்)

=> சிறந்த பின்னணிப் பாடகி :

பாம்பே ஜெயஸ்ரீ (Saudi Vellakka CC.225/2009

=> சிறந்த பின்னணிப் பாடகர் :

அர்ஜித் சிங் (Brahmastra - song Kesariya.)

=> சிறந்த ஒளிப்பதிவு :

ரவிவர்மன் (பொன்னியின் செல்வன்)

=> சிறந்த படத்தொகுப்பு :

மகேஷ் புவனேந்த் (Aattam)

=> சிறந்த ஒலிமையமைப்பு :

ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி ( பொன்னியின் செல்வன்)

Also Read: பாய்ந்த போக்ஸோ வழக்கு... கைதான ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது ரத்து - வெளியான அறிவிப்பால் சலசலப்பு!