Cinema

மகாராஜா முதல் ஜமா வரை... Oscar-க்கு பரிந்துரை செய்யப்பட்ட அந்த 6 தமிழ் படங்கள் - பட்டியல் இதோ !

திரையுலகின் உயரிய விருதாக கருதப்படும் Oscar விருது ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். இந்த விருந்தானது உலகம் முழுவதுமுள்ள படங்கள், அதன் வேலைகள் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் சிறந்தவை எது என்று பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படும். கடந்த ஆண்டு (2023) கூட ராஜமௌலியின் RRR திரைப்படத்தில் இடம்பெற்ற "நாட்டு நாட்டு.." பாடல் Oscar விருதை வென்றது. மேலும் சிறந்த ஆவணப்படமாக தமிழில் ‘The Elephant Whisperer’s விருதை வென்றது.

இந்த ஆண்டு 96-வது ஆஸ்கார் விருதில் பல்வேறு படங்கள் தேர்வு செய்யப்பட்ட ‘Oppenheimer' திரைப்படம் 7 விருதுகளை வென்றது. இந்த சூழலில் அடுத்த ஆண்டு (2025) நடத்தப்படும் 97-வது ஆஸ்கார் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவிற்கு இந்தியா சார்பில் பல்வேறு திரைப்படங்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக 6 தமிழ் திரைப்படம் அனுப்பப்பட்டுள்ளது.

1. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் :

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் கடந்த 2023 நவம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

2. மகாராஜா :

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், நட்டி, அனுராக் காஷ்யப், அபிராமி, சிங்கம் புலி மற்றும் பலர் நடிப்பில் கடந்த ஜுன் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சுமார் 100 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்துள்ளது.

3. ஜமா :

இயக்குநர் பாரி இளவழகன் இயக்கத்தில் பாரி இளவழகன், சேத்தன், அம்மு அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியான இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

4. தங்கலான் :

பா.ரஞ்சித் இயக்கத்தி விக்ரம், பார்வதி திருவோது, மாளவிகா மோகனன், டேனியல், பசுபதி, வேட்டை முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந், இந்த படம் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

5. வாழை :

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், நிகிலா விமல் பொன்வேல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் அனைவராலும் வெகுவாக கவரப்பட்டது.

6. கொட்டுக்காளி :

கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘கூழாங்கல்’ படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் சூரி, சசிகுமார், அன்னா பென் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Also Read: துப்பாக்கிச் சூடு விவகாரம் : பேட்டியளித்த வழக்கறிஞர்... நோட்டீஸ் அனுப்பிய சல்மான் கான்.. நடந்தது என்ன ?