Cinema
லப்பர் பந்து முதல் கடைசி உலகப் போர் வரை... நாளை திரையரங்குகளில் வெளியாகும் முக்கிய தமிழ் படங்கள் என்ன?
நாளை (செப்டம்பர் 20) திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல் :
= > லப்பர் பந்து :
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாஸ்திகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பால சரவணனன், தேவ தர்ஷிணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம்தான் ‘லப்பர் பந்து’. கிரிக்கெட் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
= > சட்டம் என் கையில் :
இயக்குநர் சச்சி இயக்கத்தில் சதிஷ், வித்யா பிரதீப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் ‘சட்டம் என் கையில்'. இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
= > நந்தன் :
இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஸ்ருதி பெரியசாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள ‘நந்தன்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
= > கடைசி உலகப் போர் :
பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘கடைசி உலகப் போர்’. இந்த படத்தை அவரே எழுதி, இயக்கி, இசையமைத்து, நடித்து, முதல் முறையாகத் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
= > தோழர் சேகுவாரா :
அலெக்ஸ் இயக்கத்தில் சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம்தான் ‘தோழர் சேகுவாரா’. இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
= > தோனிமா :
ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் காளி வெங்கட், ரோஷினி பிரகாஷ், வைசவ் ராஜ், விவேக் பிரசன்னா, கண்ணன் பொன்னையா, பி.எல்.தேனப்பன் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘தோனிமா’. இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
= > கோழிப்பண்ணை செல்லதுரை :
பிரபல இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா, சத்யதேவி, பவாசெல்லத்துரை, லியோ சிவகுமார், தினேஷ், மானஸ்வி கொட்டாச்சி, ரியாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!