Cinema

தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாகும் அந்த 4 தமிழ் படங்கள்... பட்டியல் உள்ளே !

ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை வரும். எனவே இதனையொட்டி நாடு முழுவதும் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு (2024) பொங்கல் அன்று அயலான், கேப்டன் மில்லர், மெரி கிறிஸ்துமஸ் போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இருப்பினும் அடுத்தடுத்து என படங்கள் வெளியாகி வந்த வண்ணமாக இருக்கும் நிலையில், இதுவரை இந்த ஆண்டு நாடு முழுவதும் வெளியான திரைப்படங்களில் தனுஷின் 'ராயன்' திரைப்படமே அதிக அளவு வசூல் செய்துள்ளது. தற்போது விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு இன்று (செப்.5) வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் 'GOAT' திரைப்படம் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது.

தொடர்ந்து ஜெய் பீம் திரைப்பட இயக்குநர் டி.ஜெ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக்கி வரும் 'வேட்டையன்' திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு வரும் அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த சூழலில் நடப்பாண்டில் (2024) தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ம் தேதி கொண்டாட்டப்படுகிறது.

இந்த நிலையில் தீபாவளியின்போது வெளியாகும் முக்கிய படங்கள் பட்டியல் தெரியவந்துள்ளது. அக்டோபர் 31-ம் தேதி வெளியாகும் படங்களின் பட்டியல் வருமாறு :

=> பிரதர் :

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்கள் இயக்கிய எம்.ராஜேஷ் இயக்கத்தில் அடுத்து உருவாகி வரும் படம்தான் 'பிரதர்'. ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார், ஸ்க்ரீன் சீன் மீடியா தயாரித்துள்ளது. காமெடி ஜானரில் உருவாகும் இந்த படம் வரும் அக்.31-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

=> அமரன் :

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள 'அமரன்' திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி லைவ் இணைந்து தயாரித்துள்ளது. இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படம், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் அக்.31-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

=> விடாமுயற்சி :

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட பலரும் நடித்து வரும் 'விடாமுயற்சி' படமானது தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

=> பிளடி பெக்கர் :

தமிழில் தற்போது முக்கிய நடிகராக வலம் வரும் கவின் நடிப்பில் உருவாகி வரும் படம்தான் 'பிளடி பெக்கர்'. நெல்சன் திலீப்குமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சிவபாலன் இயக்கத்தில் உருவாக்கி வரும் இந்த படமும் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: IC814 விமான கடத்தல்.. “அன்புள்ள தங்கைக்கு..” : இந்திய பெண்ணுக்கு பரிசு வழங்கிய பயங்கரவாதி - விவரம் என்ன ?