Cinema

70- வது தேசிய விருதுகள் அறிவிப்பு : விருதுகளை அள்ளிக் குவித்த 'பொன்னியின் செல்வன் - 1' திரைப்படம் !

இந்திய திரைப்படங்களையும், கலைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் இந்திய அரசால் தேசிய விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான 70- வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 70- ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் தேசிய அளவில் சிறந்த படத்துக்கான விருது 'ஆட்டம்' என்ற மலையாள படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

  • சிறந்த தமிழ் படமாக 'பொன்னியின் செல்வன் - 1' திரைப்படமும், சிறந்த மலையாள படமாக 'சவுதி வெள்ளைக்காரா' திரைப்படமும, சிறந்த கன்னட படமாக 'KGF - 2' திரைப்படமும், சிறந்த இந்தி படமாக 'குல்மோகர்' திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

  • சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

  • 70- ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தில் நடித்த நித்தியா மேனன் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  • சிறந்த நடிகராக காந்தாரா திரைப்பட நடிகர் ரிஷப் ஷெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  • 'திருச்சிற்றம்பலம்' படத்துக்காக சிறந்த நடன இயக்குனர்கள் விருது ஜானி மாஸ்டர், சதீஷ் கிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 70- ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் 'பொன்னியின் செல்வன் -பாகம் 1'படத்துக்காக சிறந்த பின்னணி இசை விருது ஏ.ஆர்.ரகுமானுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளர் விருது ரவிவர்மனுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

  • சிறந்த பின்னணி பாடகி விருது பாம்பே ஜெயஸ்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது.

Also Read: “நாடாளுமன்றத் தேர்தல் 2024 - 40க்கு 40 தென் திசையின் தீர்ப்பு” - முதலமைச்சரின் தேர்தல் ஆவண நூல் வெளியீடு!