Cinema
கொட்டுக்காளி : ட்ரெண்டான சிவகார்த்திகேயன் பேச்சு... சூரி பேச்சால் சிரிப்பலையாக மாறிய அரங்கம் !
தற்போதுள்ள நடிகர்களில் முக்கியமாக திகழ்பவர் சூரி. காமெடியில் இருந்து தற்போது ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கி கலக்கி வருகிறார். இந்த சூழலில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' திரைப்படம் வரும் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், வெளியாகும் முன்பே விருதுகளை பெற்று வருகிறது. இதனால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இந்த சூழலில் இன்று சென்னையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சூரி, பி.எஸ்.வினோத்ராஜ், நடிகர் சிவகார்த்திகேயன் என படக்குழு மட்டுமின்றி இயக்குநர் மிஸ்கின் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அப்போது மேடையில், நடிகரும் இப்படத்தின் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் பேசுகையில், "நான் யாரையும் கண்டுபிடித்து நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஏனென்றால் என்னை அப்படி, நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்று சொல்லி சொல்லி பழக்கிட்டார்கள். அந்த மாதிரி ஆள் நான் இல்லை. " என்று தெரிவித்தார்.
இவரது இந்த பேச்சு இன்று முழுவதுமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரை வட்டாரத்தில் சிவகார்த்திகேயன் யாரை கூறினார் என்றே பேச்சு எழுந்து வருகிறது. மேலும் இணையத்தில் இவர் தனுஷ் மற்றும் தனியார் சேனல் குறித்து பேசியதாகவும் கருத்துகள் நிலவி வருகிறது. இவர் பேசிக்கொண்டிருக்கும்போதே இன்று இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பல்வேறு கருத்துகளையும் பெற்று வந்த நிலையில், சூரியின் பேச்சால் அரங்கமே சிரிப்பலை பெற்றது.
இவரைத்தொடர்ந்து நடிகர் சூரி பேசியதாவது, "இன்று அனைத்து சேனல்களிலும் இணையத்திலும் சிவகார்த்திகேயன் பேசியதுதான் கண்டென்ட். அவர் சொன்ன விஷயம் வேறு, ஆனால் இங்கே வேறு விஷயமாக எல்லோரும் நினைத்து பரப்பிக் கொண்டிருக்கின்றனர். பல முக்கிய செய்திகள் வந்துகொண்டிருக்கும்போதும், இதைத்தான் அதிக பேர் பெரிய விஷயமாக பேசிகொண்டிருக்கிறார்கள்.
அதிலும் எனக்கு எங்கிருந்தெல்லாம் ரசிகர்கள் வருகிறார்கள்? எதில் வருகிறார்கள்? என்றெல்லாம் கூட செய்திகள் வெளியாகி வருகிறது. 'சூரிக்கு பஸ்லலாம் ரசிகர்கள் வராங்களே!' என்று பரபரப்பாக் பேசுகிறார்கள். எல்லோருக்கும் சென்னையில் இருந்து ரசிகர்கள் வர முடியாது. ஒரு சில ஊர்களிலிருந்து தான் ரசிகர்கள் வருவார்கள்.
அப்படி வெளியூர்களில் இருந்து வருபவர்கள் பஸ்ஸில்தான் வர முடியும். பின்ன, பாத யாத்திரையாகவா வர முடியும்? மதுரையிலிருந்து வரவங்க பஸ்ல வராம எப்படி வர முடியும்? ஆனால் அதை கூட ஒரு பெரிய விஷயமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்" என்று கூறவே அரங்கமே சிரிப்பலையில் ஆழ்ந்தது.
தொடர்ந்து பேசிய சூரி தனது தாய் குறித்தும் நெகிழ்ச்சி தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், "கொட்டுக்காளி திரைப்படத்துக்கு விருது வாங்குவதற்காக பெர்லினுக்கு சென்றேன். அப்போது எனது அம்மா, ஃபோன் செய்து, எங்கப்பா இருக்குற? என்று கேட்டார்.
நான் பெர்லினில் இருக்கேன் என்று கூறியதும், அவன் யார் என்று கெட்டார். உடனே அது ஒரு நபர் இல்லை, வெளிநாடு என்று கூறினேன். பிறகு, இங்கிருந்து வரும்போது என்ன வேண்டும் என்று என் அம்மாவிடம் கேட்டபோது, ‘கோடாளி தைலமும், டார்ச் லைட்டும்’ வாங்கிட்டு வர சொன்னார்” என்றார். இதனால் அரங்கமே நெகிழ்ச்சியடைந்தது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!