Cinema
நடிகை சித்ரா மரண வழக்கு : நிரபராதி என விடுதலை செய்யப்பட்ட கணவர்... நீதிமன்றத்திலேயே கதறி அழுத ஹேம்நாத்!
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் சித்ரா. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் 'முல்லை' கதாபாத்திரம் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருந்தார். இந்த சூழலில் இவர் கடந்த 2020 டிசம்பர் 9ஆம் தேதி சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் மரமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
தமிழ் திரையுலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விவகாரம் அப்போது தொடர்ந்து பேசுபொருளாகி இருந்து வந்தது. தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக சித்ராவின் பெற்றோர் புகார் அளித்த நிலையில், சித்ராவின் காதலன் ஹேம்நாத்திடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே இரகசிய திருமணம் ஆன விவகாரம் தெரியவந்தது.
தொடர்ந்து சித்ரா நடிப்பதால் இருவருக்குள்ளும் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், ஹேம்நாத் மன ரீதியாக சித்ராவுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே சித்ராவின் உறவினர், பெற்றோர், நண்பர்கள் என பல விதங்களில் போலீசார் விசாரித்து வந்தனர்.
அப்போது அவருக்கு பண நெருக்கடி இருந்ததாகவும், அவரை அரசியல் பிரமுகர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாகவும் தகவல் வெளியானது. எனினும் இதுகுறித்த உண்மை விவரம் முழுமையாக வெளிவரவில்லை. தொடர்ந்து கைது செய்யப்பட்ட சித்ராவின் காதல் கணவர் ஹேம்நாத், ஜாமீனில் வெளியே வந்தார்.
இருப்பினும் இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த மகளிர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 10) அவர் நிரபராதி என்று கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ரேவதி, ஹேமந்த்து உள்ளிட்ட 7 பேருக்கும் இந்த வழக்கில் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவர்களுக்கு எதிராக போலீஸார் வலுவான சாட்சிகளை சமர்ப்பிக்கவில்லை என்றும் கூறி விடுதலை செய்துள்ளார். தன்னை குற்றமற்றவர் என்று கூறியதும், நீதிமன்றத்திலேயே ஹேம்நாத் கதறி அழுதுள்ளார்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!