Cinema

"இந்தியா முழுக்க சாதிய ஏற்றத்தாழ்வு உள்ளது" - இயக்குனர் வெற்றிமாறன் !

இயக்குனர் அமீர் நடிப்பில் வெளியாகியுள்ள உயிர் தமிழுக்கு திரைப்படம் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள செந்தில்வேல் திரையரங்கத்தில் திரையிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் பார்ப்பதற்காக வருகை தந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் வெற்றிமாறன், "இயக்குனர் அமீர் நடித்துள்ள திரைப்படம் பார்ப்பதற்காக வந்துள்ளேன். சீரியஸான அமீர் ஜாலியான கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். விடுதலை இரண்டு படப்பிடிப்பு தென்காசி மாவட்டத்தில் நடந்து வருகிறது.

20 முதல் 25 நாட்களுக்கு படப்பிடிப்புக்கான வேலைகள் உள்ளது. அது முடிந்தவுடன் திரைப்படம் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வெளியாகும். விடுதலை திரைப்பட பணிகள் நிறைவு பெற்றவுடன் வாடிவாசல் திரைப்படத்திற்கான பணிகள் தொடங்கும்.

இந்தியாவில் சாதிய ஏற்றத்தாழ்வு சமூக பாகுபாடு இல்லை என்று சொல்பவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியா முழுக்க சாதிய பாகுபாடுகள் உள்ளது. அதற்கு பல்வேறு சம்பவங்கள் உதாரணமாக உள்ளது. காப்புரிமை பிரச்சனை என்பது அனைத்து தளங்களிலும் உள்ளது.

உருவாக்குபவர்களுக்கான உத்திரவாதமும் உரிமையும் தேவை என்பதை நான் நினைக்கிறேன். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஓ டி டி தளம் மிகப் பெரிய பலமாக இருந்தது. தயாரிப்பாளர்கள் முதலீட்டை பெறுவதற்கு ஓடிடி தளம் மிகப்பெரிய உதவியாக அமைந்தது. ஓ டி டி தளத்தை மட்டுமே நம்பி இருக்க கூடாது.திரைப்படங்களை திரை அரங்குகளில் வெளியிட்டு மக்கள் வந்து பார்த்தால் கிடைக்கும் வருவாய் எப்படி இருக்கும் என்ற நிலை மீண்டும் திரும்பி உள்ளது என அவர் தெரிவித்தார்

Also Read: இந்தியப் பெருங்கடலில் பல மடங்கு அதிகரித்த வெப்பநிலை : கால நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை !