Cinema

பிரபல குணச்சித்திர நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார்... தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து நிகழும் சோகம் !

தமிழ் திரையுலகில் பிரபல குணச்சித்திர நடிகராக திகழ்பவர் விஸ்வேஷ்வர ராவ். ஆரம்பத்தில் திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த இவர், அதன்பின்னர், முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். கடந்த 2003-ல் பாலா இயக்கத்தில் வெளியான 'பிதாமகன்' படத்தில் லைலாவுக்கு தந்தையாக நடித்து, ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

குணச்சித்திரம் மட்டுமின்றி, சில படங்களில் நகைச்சுவை நடிகராகவும் தோன்றினார். மேலும் சூர்யா நடிப்பில் வெளியான 'உன்னை நினைத்து' படத்திலும் ஆந்திராவை சேர்ந்த இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தனது 6 வயதில் இருந்தே சுமார் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்த சூழலில் கடந்த 2022-ம் ஆண்டு இவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாக உடல்நிலை மோசமான நிலையில், இன்று அவர் தனது 64-வது வயதில் காலமானார். இவரது மறைவுக்கு தற்போது திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த மார்ச் 27-ம் தேதி பிரபல காமெடி நடிகர் லொள்ளு சபா சேஷு (60) மாரடைப்பு காரணமாக காலமானார். இவரை தொடர்ந்து கடந்த மார்ச் 29-ம் தேதி பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜியும் (48) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தமிழ் திரையுலகில் கடந்த 1 வார காலமாக தொடர்ந்து உயிரிழப்பு சம்பவங்கள் குறித்த செய்தியால் ரசிகர்கள் திரை பிரபலன்கள் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் உள்ளனர்.

Also Read: எல்விஷை தொடர்ந்து முனாவர்: போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்ந்து சிக்கும் இந்தி பிக் பாஸ் வெற்றியாளர்கள்!