Cinema
Youtuber-ஐ தாக்கிய சக Youtuber.. கைகலப்பாக மாறிய இணையத்தில் வெடித்த சண்டை - மீண்டும் சர்ச்சையில் எல்விஷ்!
இந்தியில் பிரபல youtuber ஆக திகழ்பவர் எல்விஷ் யாதவ் (Elvish Yadav). இதன் மூலம் பிரபலமான இவர், பிக் பாஸ் ஓடிடி 2-வது சீசனில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். அதோடு சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்த ஷோவில் வெற்றியாளராகவும் ஆனார். அண்மைக்காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் இவர், தற்போது சக Youtuber ஒருவரை தாக்கியதாக மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அதாவது, சாகர் தாகூர் என்ற நபர் Maxtern என்ற பெயரில் சமூக வலைதளத்தில் அறியப்படுகிறார். இவரும் Youtube பிரபலமாக வலம் வருகிறார். இந்த சூழலில் இவர் அண்மையில் எல்விஷ் யாதவ் குறித்து தனது வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் எல்விஷ் குறித்து அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது.
எனவே இவருக்கு எல்விஷ் கண்டனத்தை தெரிவித்து, மிரட்டலும் விடுத்தார். தொடர்ந்து இருவரும் சமூக வலைதளங்களில் ஒருவருக்கு ஒருவர் தங்கள் வெறுப்பை பகிர்ந்து கொண்டனர். கடந்த சில நாட்களாக நடந்து வந்த இந்த விவகாரம், தற்போது கை கலப்பாக மாறியுள்ளது. அதாவது Maxtern-ஐ எல்விஸ் தனியாக அழைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதையடுத்து தான் தாக்கப்பட்டதாக Maxtern தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக போலீசிலும் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் எல்விஸ் யாதவ் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் இணையத்தில் பெரும் வைரலான நிலையில், இதற்கு பதில் வீடியோ ஒன்றையும் எல்விஸ் வெளியிட்டுள்ளார்.
அதில் வன்முறையை தூண்டும் விதமாக எல்விஸ் பேசியதால், அவருக்கு இணையவாசிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் எல்விஸ் மற்றும் Maxtern ஒருவரை ஒருவர் வசைபாடியதோடு குடும்ப உறுப்பினர்களை உயிரோடு எரித்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதற்கும் இணையாவசிகள் கண்டனம் தெரிவித்து வருவதோடு, எல்விஷை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் எல்விஸ் பாம்பு விஷத்தை போதைக்காக பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் உ.பி-யில் நடைபெற்ற தனியார் பார்ட்டியிலும் பாம்பு விஷத்தை போதைக்காகப் பயன்படுத்தியாக புகார் எழுந்தது. அதோடு எல்விஷ் யாதவ், ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, பாஜக ஆளும் அரியான மாநில முதலமைச்சர் மனோகர் உள்ளிட்ட பாஜக தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாந்து.
மேலும் இவர் பாஜக கொடி வைத்த காரில் வந்து இறங்கியது குறித்த புகைப்படமும், பிக்பாஸில் இருந்த இவருக்கு ஆதரவாக பாஜகவினர் ஓட்டு கேட்டது குறித்த செய்திகளும் தற்போது இணையத்தில் வைரலானது.
இதைத்தொடர்ந்து அண்மையில் ஹோட்டல் ஒன்றில் ஒருவரை அனைவர் முன்பும் அடிப்பது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி கண்டனங்களை எழுப்பியது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சிக்கலில் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!