Cinema
கேப்டன் மில்லர் vs அயலான் : நாளை வெளியாகும் 4 படங்கள் என்ன? : விவரம் இங்கே!
ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு ரஜினி, கமல், அஜித், விஜய் படங்களே அதிகம் வெளியாகும். கடந்த ஆண்டுகூட விஜயின் ’வாரிசு’, அஜித்தின் ’துணிவு’ படம் வெளியானது. ஆனால் இந்த ஆண்டு இப்படி உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகவில்லை. இதற்கு மாறாகப் பொங்கல் ரேஸில் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி படங்கள் மோதுகிறது.
கேப்டன் மில்லர்
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர். இப்படத்தின் நாயகன் தனுஷ். பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ், சிவராஜ் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். கேப்டன் மில்லர் படம் தனுஷின் கரியரில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் நாளைக்கு திரைக்கு வருகிறது.
அயலான்
'நேற்று இன்று நாளை' படத்தின் இயக்குநர் ரவிக்குமாரின் அடுத்த படைப்புதான் அயலான். சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத்சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் ஏலியன் கதைக்களத்தைக் கொண்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 2021ம் ஆண்டு இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 6 ஆண்கள் கழித்து நாளைதான் திரைக்கு வருகிறது 'அயலான்'.
மெரி கிறிஸ்துமஸ்
அந்தாதூன் படத்தின் வெற்றியை அடுத்து விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் ஜோடியை வைத்து மெரி கிறிஸ்துமஸ் படத்தை இயக்கியுள்ளார் ஸ்ரீராம் ராகவன். இப்படம் தமிழ் உள்ளிட்ட4 மொழிகளிலும் வெளியாகிறது. இப்படம் விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிஷன் சாப்டர் 1
ஏ.எல். விஜய் இயக்கத்தில் நாளை வெளியாக இருக்கும் படம் 'அச்சம் என்பது இல்லையே மிஷன் சாப்டர் 1'. இப்படத்தில் நடிகர் அருண் விஜய், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க அக்ஷன் மையமாகக் கொண்டு படத்தை இயக்கியுள்ளார் விஜய். இப்படமும் நாளை வெளியாகிறது. இந்த நான்கு படத்தில் பொங்கல் வசூலை யார் அள்ளப்போகிறார்கள் என்பது நாளை தெரிந்துவிடும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!