Cinema

Waka Waka Hey Hey... பிரபல பாப் பாடகி ஷகிராவுக்கு 21 அடியில் வெண்கல சிலை... நெகிழ்ச்சியில் ரசிகர்கள் !

மேற்கத்திய நாடுகளில் பிரபல பாப் பாடகியாக இருப்பவர் ஷகிரா (Shakira Isabel Mebarak Ripoll). கொலம்பியாவை சேர்ந்த இவர், பாடகி மட்டுமல்லாமல் பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் ஆவார். 1991-ல் Magia என்ற ஆல்பம் பாடல் மூலம் அறிமுகமான இவர், 2001-ல் வெளியான Laundry Service என்ற ஆல்பம் மூலம் ரசிகர்கள் பலரது மத்தியிலும் அறியப்பட்டார். இந்த பாடல் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 13 மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டது.

தொடர்ந்து பல ஆல்பங்களை பாடி வந்த இவர, 2010-ல் வெளியான "ஷமினா மினா ஓய்..ஓய்.. வக்கா..வக்கா.. ஹே.. ஹே.." என்ற பாடல் உலகம் முழுவதும் இவரது குரலை கேட்க வைத்தது. 2010-ல் உலக்கோப்பை கால்பந்து போட்டி முதல்முறை ஆப்பிரிக்கா கண்டத்தின் தென்னாப்பிரிக்கா நாட்டில் நடைபெற்றது. அப்போது இந்த பாடல் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக இருந்திருந்தது. மேலும் தற்போதுவரை மிக சிறந்த கால்பந்து பாடலாகவும் இருந்து வருகிறது.

இந்த பாடலுக்காகவே இவருக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். உலகம் முழுவதும் ஒலித்த இந்த பாடலுக்கு கிராமி விருதுகள், இசை விருதுகள் என பல்வேறு விருதுகள் கிடைத்தது. இவர் ஆல்பம் பாடல் மட்டுமல்லாமல் சில டிவி ஷோக்களிலும் கலந்துகொண்டுள்ளார்.

தற்போது 46 வயதாகும் இவருக்கு 2 முறை திருமணமானது. அதில் 2-வது கணவரான பிரபல கால்பந்து வீரர் Gerard Piqué Bernabeu-வை கடந்த 2022-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இந்த சூழலில் இவருக்கு சுமார் 21 அடியில் அற்புதமான சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. ஷகிராவின் சொந்த ஊரான கொலம்பியாவில் உள்ள பரன்குவிலரஸில் 21 அடி உயர வெண்கல சிலை வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான 'ஹிப்ஸ் டோண்ட் லை' (Hips don't lie) என்ற ஆல்பத்தின் வெளியீட்டில் இவரது நடனத்தில் இருந்த ஒரு அசைவில் இவரது சிலை வடிவைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை யினோ மார்க்ஸ் (Yino Márquez) மற்றும் அவரது மாணவர்கள் வடிவமைத்துள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 2023 SPECIAL : DADA முதல் பார்க்கிங் வரை.. முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த இயக்குநர்கள்.. பட்டியல் இதோ!