Cinema
வன்முறையில் ஈடுபட்ட ஆதரவாளர்கள்... 4 நாட்களில் பிக்பாஸ் வெற்றியாளர் அதிரடி கைது - காரணம் என்ன ?
இந்தியா முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெவ்வேறு மொழிகளில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது போல், தெலுங்குவில் நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்குகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்னர் தெலுங்கு பிக்பாஸ் 7 நிறைவடைந்தது. இந்த போட்டியில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்தது. பொதுவாகவே பிக்பாஸ் மூலம் ஒருவர் பிரபலமானால், அவருக்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிராகவும் இருப்பது வழக்கம்.
அந்த வகையில் பிரபல youtuber பல்லவி பிரஷாந்த் என்பவர் இதில் போட்டியாளர்காக கலந்து கொண்டுள்ளார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியின் இறுதிக்கட்டத்தில், இவருக்கும் அமர்தீப் சவுத்ரி என்பவருக்கும் போட்டி நிலவியது. அப்போது கடந்த 4 நாட்களுக்கு முன்னர் வெற்றியாளர் யார் என்று ரசிகர்கள் பெரும் ஆவலில் இருந்தனர்.
மேலும் இந்த ரியாலிட்டி ஷோவை காண, இது நடக்கும் இடமான பஞ்சாரா ஹில்ஸ் ஸ்டூடியோவிற்கு ரசிகர்கள் பலரும் நேரில் சென்றனர். இதனால் அங்கே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த சூழலில் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருந்த வெற்றியாளர் அறிவிப்பு வெளியானது. அதன்படி அமர்தீப் சவுத்ரி 2-ம் இடத்தையும், பல்லவி பிரஷாந்த் முதலிடத்தையும் பிடித்து வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இதனை கேட்ட அங்கிருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் கத்தி கூச்சலிடவே, அமர்தீப் மற்றும் பல்லவி பிரஷாந்த் ரசிகர்களுக்கிடையே மோதல் வெடித்தது. தொடர்ந்து இருவருக்குள்ளும் ஏற்பட்ட வாக்குவாதம் ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியது. இதனால் உக்கிரத்தில் இருந்த ரசிகர்கள் அங்கிருந்த சக நபர்களையும் தாக்கியதோடு, பொது சொத்தான அரசு பேருந்தையும் கற்களை கொண்டு வீசி சேதம் உண்டாக்கினர்.
இந்த தாக்குதலில் சுமார் 6 பேருந்துகள் சேதமாகியுள்ளதாக போக்குவரத்துக்கு நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், மக்கள், தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அமர்தீப்பின் காரையும் பல்லவி பிரஷாந்தின் ரசிகர்கள் அடித்து நொறுக்கினர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிக்பாஸ் போட்டி வெற்றியாளர் பல்லவி பிரஷாந்தை போலீசார் கைது செய்தனர். பல்லவி பிரஷாந்த் கைது செய்யப்பட்டதற்கு அவரது ரசிகர்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். எனினும் சமூக பாதிப்புக்கு எதிராக அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்ட்டுள்ளதாக போலீசார் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் தற்போது அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?