Cinema
“சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.. தப்பா எடிட் பண்ணிட்டாங்க” - திரிஷா குறித்த பேச்சுக்கு மன்சூர் விளக்கம்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் 'லியோ'. விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும் சுமார் ரூ.600 கோடி வரை வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனியார் youtube சேனல்கள் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகளிடம் பேட்டி எடுத்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளரை சந்தித்தார். அப்போது லியோ படம் குறித்தும், திரிஷா குறித்தும் கருத்து தெரிவித்தார். அதாவது, நடிகை திரிஷாவுடன் தான் நடிக்க ஆசைப்பட்டதாக கூறிய அவர், எந்த மாதிரி கதாபாத்திரம் என்று அவரே ஒரு யூகத்திற்கு சென்று ஆபாசமாக நினைத்து பொதுவெளியில் பேசினார்.
மேலும் திரிஷாவுடன் ரேப் சீனில் நடிப்பேன் என்று தான் நினைத்ததாகவும், ஆனால் அது நடக்காமல் போனதால் வருத்தமாக உள்ளதாகவும் பேசியிருந்த அவர், 150-க்கும் மேற்பட்ட படங்களில் ரேப் சீனில் நடித்தது குறித்து சிரித்துக்கொண்டே பேசியிருந்தார். முகச்சுழிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள இவரது பேச்சு தற்போது அனைவர் மத்தியிலும் வலுத்த கண்டனங்களை எழுப்பியுள்ளது.
மன்சூரின் இந்த கருத்துக்கு நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில், மன்சூர் அலிகானின் பேச்சு அருவருக்கத்தக்க வகையில் இருக்கிறது. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவரது பேச்சு ஆணாதிக்க மனநிலையிலும், அவமரியாதை செய்யும் விதமாகவும், பெண் வெறுப்பை பரப்பும் வகையிலும், பாலின பாகுபாட்டைப் பிரதிபலிக்கக் கூடிய வகையில் மோசமாக உள்ளது.
அவரைப் போன்ற ஒரு கேவலமான ஒரு மனிதருடன் நான் நடிக்கவில்லை என்பது மகிழ்ச்சியாக உள்ளது. இனியும் எனது திரையுலக வாழ்க்கை முழுவதும் அவருடன் நடிக்க மாட்டேன்.” என்று கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். திரிஷாவுக்கு ஆதரவாக திரையுலகை சேர்ந்த முக்கிய பிரபலங்களான, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், மஞ்சிமா மோகன், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ரசிகர்கள், இணையவாசிகள் என பலரும் மன்சூரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருவதோடு, அவர் பேசியதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தனது பேச்சு குறித்து நடிகர் மன்சூர் அலிகான் தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் மன்சூர் அளித்த விளக்கம் : "அய்யா' பெரியோர்களே.திடிர்னு திரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு என் பொண்ணு பசங்க, வந்த செய்திகள அனுப்பிச்சாங்க. அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகுற நேரத்துல. நான் வர்ர தேர்தல்ல ஒரு பிரபலகட்சி சார்பா போட்டியிடறேன்னு சொன்ன வேளையில வேண்டும்னே நல்லா எவனோ கொம்பு சீவிவிட்டுருக்கானுக. உண்மையில அந்த பொண்ண உயர்வாத்தான் சொல்லிருப்பேன்.
அனுமாரு சிரஜ்சீவி மலைய கையிலேயே தாங்கிட்டு போன மாதிரி காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்துலேயே திருப்பி கொண்டு வந்துட்டாங்க. பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்ல. ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன். அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சரவனா. திரிஷாட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க. அய்யா என்கூட நடிச்சவங்கள்ளாம் MLA, M.P, மந்திரின்னு ஆயிட்டாங்க பல கதாநாயகிகள்.
பெரிய தொழில் அதிபர்களகட்டிட்டு செட்டில் ஆகிட்டாங்க. மேலும். லியோ பூஜையிலேயே என் பொண்ணு தில் ரூபா உங்களோட பெரியFAN ணுன்னு சொன்னேன். இன்னும் 2. பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணனும் 360 படங்கள்ல நடிச்சிட்டேன். நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாத குடுக்கறவன் எல்லாருக்கும் தெரியும் சில சொம்பு தூக்கிகளோட பருப்பெல்லாம் என்ட்ட வேகாது. திரிஷாட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்கண்ணு தெரியுது உலகத்துல எத்தனயோ பிரச்சின இருக்கு... பொழப்ப பாருங்கப்பா.... நன்றி. மன்சூரலிகான்"
இந்த நிலையில், மன்சூர் அலிகான், தான் சும்மா விளையாட்டுக்கு சொன்னதாக கூறிய விவகாரம் மேலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!