Cinema
விஜயுடன் மீண்டும் நேரடியாக மோதும் பாலய்யா : ‘LEO‘ படக்குழு அறிவிப்பால் ஆடிப்போன தெலுங்கு சினிமா !
தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் பாலகிருஷ்ணா. இவரது நடிப்பில் எந்த படம் வந்தாலும் ரசிகர்களால் அந்த படம் தெலுங்கில் மாஸ் வெற்றிபெறும். இதன் காரணமாகவே இவருக்கு ரசிகர்களின் மவுசு அதிகரித்தே வருகிறது. இந்த சூழலில் தற்போது இவரது படத்தின் வெளியீடு அன்றே விஜயின் லியோ படத்தின் தெலுங்கு வெளியீடு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள 'லியோ' படம் வரும் 19-ம் தேதி உலகம் முழுக்க வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதாக எழுந்துள்ளது. இந்த படத்தின் வெளியீட்டுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் லியோ படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி நாள் ஒன்றுக்கு 5 காட்சிகள் என 6 நாட்கள் வரை அனுமதி வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் மீதான விசாரணையில், நீதிமன்றமும் தமிழ்நாடு அரசின் உத்தரவை முன்மொழிந்துள்ளது. இதனால் முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்படவுள்ளது.
இந்த சூழலில் தற்போது தெலுங்கில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. வரும் 19-ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் வெளியீடானது, டைட்டில் தொடர்பான சர்ச்சை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த படத்தின் டைட்டில் உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கில், தெலங்கானா நீதிமன்றம் லியோ படத்தின் தெலுங்கு பதிப்பை வரும் 20-ம் தேதி வரை வெளியிடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்தின் தெலுங்கு விநியோகஸ்தர் நாக வம்சி, இந்த படத்தின் டைட்டில் தொடர்பான பிரச்னை சுமூகமாக தீர்க்கப்பட்டு சொன்ன தேதியில் (19-ம் தேதி) வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். எனினும் இந்த படம் வெளியாக இன்னும் 1 நாளே உள்ளது என்பதால் ரசிகர்கள் பெரும் ஆர்வமாக உள்ளனர்.
இந்த நிலையில், இந்த படத்தின் வெளியீட்டு தேதியான 19-ம் தேதியே தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணாவின் 'பகவந்த் கேசரி' (Bhagavanth Kesari) என்ற படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஸ்ரீ லீலா, காஜல் அகர்வால், சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதனால் தெலுங்கில் கடும் போட்டிகள் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி தெலுங்கில் வெளியான விஜயின் 'வாரிசு' படம், பாலகிருஷ்ணாவின் 'வீர சிம்ஹா ரெட்டி' படத்துடன் நேரடியாக மோதியது. எனினும் இந்த படத்தின் முதல் நாள் வசூலில் பாலகிருஷ்ணாவின் படம் ரூ.50 கோடிக்கும் மேல் பெற்ற நிலையில், தற்போது மீண்டும் இரண்டு பேரின் படங்களும் நேரடியாக மோதவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பூரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!