Cinema
ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் நோட்டீஸ்.. பரபரப்பான பாலிவுட்.. காரணம் என்ன ?
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரன்பீர் கபூர். இவர் நடிகை ஆலியா பட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து திரையில் நடித்து வரும் இவரது நடிப்பில் அண்மையில் Tu Jhoothi Main Makkaar என்ற படம் வெளியானது. கலவையான விமர்சனங்களை இந்த படம் பெற்றிருந்தாலும் தொடர்ந்து திரைப்படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
அடுத்ததாக இவரது நடிப்பில் உருவாகும் 'அனிமல்' என்ற படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. இவர் திரைப்படத்தில் மட்டுமல்லாமல், அவ்வப்போது விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக FLIPKART, LAYS, COCO COLA, LENOVA உள்ளிட்ட விளம்பரத்தில் இவரை அடிக்கடி காணலாம்.
மேலும் திரைப்படம் ஒரு பக்கம், விளம்பரங்கள் ஒரு பக்கம் என பிசியாக நடித்து வருகிறார். இந்த சூழலில் இவர் சூதாட்ட மொபைல் ஆப் விளம்பரத்தில் நடித்ததற்காக அமலாக்கத்துறை இவரை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. இதனால் தற்போது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது மகாதேவ் என்ற ஆன்லைன் சூதாட்ட செயலி பணமோசடி செய்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புகார் எழுந்தது. இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக விசாரணை மேற்கொண்டபோது, சவுரப் சந்திராகர் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த சூதாட்ட செயலியை இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இயக்கி வந்தது தெரியவந்தது.
மேலும் அவர் தனது திருமணத்திற்கு சுமார் ரூ.200 கோடி வரை செலவு செய்ததும், அதில் சன்னி லியோன், டைகர் ஷெராஃப் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்துகொண்டதும், இதற்காக அவர்களுக்கு விமான கட்டணம் மட்டுமே மொத்தம் ரூ.42 லட்சம் வரை செலவு செய்யப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. மேலும் இந்த ஆப் வெற்றி விழாவில் கலந்து கொள்ள கூட, நடிகர்களுக்கு முன்பணம் கொடுத்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சூதாட்ட செயலியின் விளம்பரங்களில் நடித்த நடிகர் ரன்பீர் கபூரிடம் விசாரணை மேற்கொள்வதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி ரன்பீர் கபூர் வரும் 6-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரை தொடர்ந்து பல பாலிவுட் நடிகர்களும் இதில் விசாரிக்கப்படுவர் என்று கூறப்படுகிறது. இதனால் தற்போது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!