Cinema

SIIMA 2023 : விருதுகளை அள்ளிக்குவித்த தமிழ் நடிகர்கள்.. யார் யார் வெற்றியாளர்கள்.. முழு பட்டியல் இதோ !

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (South Indian International Movie Awards) என்று சொல்லப்படும் SIIMA விருதுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் தென்னிந்திய திரையுலகில் சிறந்த திரைப்படம், நடிகை, நடிகர், இயக்குநர் என பல பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருது கொடுத்து கெளரவிக்கப்படும்.

கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து கொடுக்கப்பட்டு வரும் இந்த விருது, சிறந்த அங்கீகாரமாக திரை பிரபலங்கள் கருதுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வெவ்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு பெங்களுருவில் நடைபெற்ற இந்த விருது நிகழ்ச்சி. இந்த ஆண்டு துபாயில் நடைபெற்றது. SIIMA 2023 விருதுகள் வழங்கும் விழாவில் பல திரை கலைஞர்கள் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் பெற்றுள்ளனர்.

செப்டம்பர் 15, 16 ஆகிய 2 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் முதல் நாள் தெலுங்கு மற்றும் கன்னட திரைக்கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், நேற்று 16-ம் தேதி, தமிழ், மலையாள திரைக்கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் பொன்னியின் செல்வன், விக்ரம் உள்ளிட்ட படங்கள் விருதுகளை குவித்துள்ளது.

அந்த பட்டியல் பின்வருமாறு :

தமிழ் :

* சிறந்த நடிகர் - கமல் (விக்ரம்)

* சிறந்த நடிகை - த்ரிஷா (பொன்னியின் செல்வன் 1)

* சிறந்த படம் - பொன்னியின் செல்வன் 1

* சிறந்த இயக்குநர் - லோகேஷ் கனகராஜ் (விக்ரம்)

* சிறந்த காமெடி நடிகர் - யோகிபாபு (லவ் டுடே)

* சிறந்த வில்லன் - எஸ்.ஜே.சூர்யா (டான்)

* சிறந்த இசையமைப்பாளர் - அனிருத் (விக்ரம்)

* சிறந்த பாடகர் - கமல் (விக்ரம்)

* சிறந்த பாடலாசிரியர் - இளங்கோ கிருஷ்ணன் (பொன்னியின் செல்வன் 1)

* சிறந்த துணை நடிகர் - காளி வெங்கட் (கார்கி)

* சிறந்த துணை நடிகை - வசந்தி (விக்ரம்)

* சிறந்த அறிமுக நடிகர் - பிரதீப் ரங்கநாதன் (லவ் டுடே)

* சிறந்த அறிமுக நடிகை - அதிதி ஷங்கர் (விருமன்)

* சிறந்த அறிமுக இயக்குநர் - மாதவன் (ராக்கெட்ரி - தி நம்பி விளைவு)

* சிறந்த நடிகை (விமர்சகர்கள் தேர்வு) - கீர்த்தி சுரேஷ் (சாணி காயிதம்)

* சிறந்த நடிகர் (விமர்சகர்கள் தேர்வு) - மாதவன் (ராக்கெட்ரி - தி நம்பி விளைவு)

* சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - தோட்டா தரணி (பொன்னியின் செல்வன் 1)

* சிறந்த ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் 1)

* சிறந்த அறிமுக தயாரிப்பாளர் - கௌதம் ராமச்சந்திரன் (கார்கி)

* திரைத்துறையில் சிறந்த பங்களிப்பாளர் விருது - மணி ரத்னம்

Also Read: SIIMA 2023 : விருதுகளை அள்ளிக்குவித்த KGF 2, சீதாராமம்.. வெற்றியாளர்களின் பட்டியல் முழு விவரம் !