Cinema

SIIMA 2023 : விருதுகளை அள்ளிக்குவித்த KGF 2, சீதாராமம்.. வெற்றியாளர்களின் பட்டியல் முழு விவரம் !

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (South Indian International Movie Awards) என்று சொல்லப்படும் SIIMA விருதுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் தென்னிந்திய திரையுலகில் சிறந்த திரைப்படம், நடிகை, நடிகர், இயக்குநர் என பல பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருது கொடுத்து கெளரவிக்கப்படும்.

கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து கொடுக்கப்பட்டு வரும் இந்த விருது, சிறந்த அங்கீகாரமாக திரை பிரபலங்கள் கருதுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வெவ்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு பெங்களுருவில் நடைபெற்ற இந்த விருது நிகழ்ச்சி. இந்த ஆண்டு துபாயில் நடைபெற்றது. SIIMA 2023 விருதுகள் வழங்கும் விழாவில் பல திரை கலைஞர்கள் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் பெற்றுள்ளனர்.

அந்த பட்டியல் பின்வருமாறு :

=> தெலுங்கு :

* சிறந்த நடிகர் : ஜூனியர் என்டிஆர் (RRR)

* சிறந்த நடிகை : ஸ்ரீலீலா (தமாகா)

* சிறந்த இயக்குநர் : ராஜமெளலி (RRR)

* சிறந்த படம் : சீதாராமம்

* சிறந்த பாடலாசிரியர் : சந்திரபோஸ் (RRR)

* சிறந்த இசையமைப்பாளர் : எம்.எம்.கீரவாணி (RRR)

* சிறந்த பின்னணிப் பாடகர் : மிர்யாளா ராம் (டிஜே டில்லு)

* சிறந்த பின்னணிப் பாடகி : மாங்க்லி (தமாகா)

* சிறந்த காமெடி நடிகர் : ஸ்ரீனிவாச ரெட்டி (கார்த்திகேயா 2)

* சிறந்த துணை நடிகை : சங்கீதா (மசூதா)

* சிறந்த அறிமுக நடிகை : மிருணல் தாகூர் (சீதாராமம்)

* சிறந்த அறிமுக தயாரிப்பாளர்கள் : ஷரத்,அனுராக் (மேஜர்)

* சிறந்த அறிமுக இயக்குநர் : மல்லிடி வசிஷ்டா (பிம்பிசாரா)

* சிறந்த நடிகர் (விமர்சகர்கள் தேர்வு) : அதிவிசேஷ்

* சிறந்த நடிகை (விமர்சகர்கள் தேர்வு) : மிருணல் தாகூர் (சீதாராமம்)

* ஆண்டின் சிறந்த பேசுபொருள் : கார்த்திகேயா 2

* நம்பிக்கையூட்டும் புதுமுகம் : பெல்லம்கொண்டா கணேஷ்

* ஃப்ளிப்கார்ட் ஃபேஷன் யூத் ஐகான் : ஸ்ருதிஹாசன்

=> கன்னடம் :

* சிறந்த நடிகர் : யாஷ் (KGF 2)

* சிறந்த நடிகை : ஸ்ரீநிதி ஷெட்டி (KGF 2)

* சிறந்த படம் : 777 சார்லி

* சிறந்த வில்லன் நடிகர் : அச்யுத் குனார் (காந்தாரா)

* சிறந்த ஒளிப்பதிவாளர் : புவன் கவுடா (KGF 2)

* சிறந்த துணை நடிகர் : திகந்த் மஞ்சாலே (காலிபட்டா 2)

* சிறந்த துணை நடிகை : சுபா ரக்ஷா (ஹோம் மினிஸ்டர்)

* சிறந்த அறிமுக நடிகர் : ப்ருத்வி ஷாமனூர்

* சிறந்த அறிமுக நடிகை : நீதா அசோக் (விக்ராந்த் ரோணா)

* சிறந்த அறிமுக தயாரிப்பாளர் : அபேக்ஷா புரோஹித் மற்றும் பவன் குமார் வடேயார் (டோலு)

* சிறந்த நடிகர் (விமர்சகர்கள் தேர்வு) : ரிஷப் ஷெட்டி

* சிறந்த நடிகை (விமர்சகர்கள் தேர்வு) : சப்தமி கவுடா (காந்தாரா)

Also Read: “என்னை மாட்ட வைக்காதீங்க.. மாட்ட மாட்டேன்..” - செய்தியாளர்கள் கேள்விக்கு இயக்குநர் மிஷ்கின் கலகல பதில் !