Cinema
“என்னை மாட்ட வைக்காதீங்க.. மாட்ட மாட்டேன்..” - செய்தியாளர்கள் கேள்விக்கு இயக்குநர் மிஷ்கின் கலகல பதில் !
டிஜிட்டல் டிரீம்ஸ் கலை கண்காட்சியின் துவக்க விழா நிகழ்ச்சி நேற்று சென்னை மயிலாப்பூர் சி.ஐ.டி காலணியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் மணிரத்னம், மிஷ்கின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் டிஜிட்டல் முறையிலான பல்வேறு வகையான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி செப்டம்பர் 25 வரை நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் மிஷ்கின், லியோ படம் குறித்து பேசியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "ஒரு எழுத்தாளன், பார்வையாளன், ஒரு ஓவியன் அல்லது கடவுள் இவர்கள் எல்லாருடைய பார்வையும் இயற்கையை நோக்கி மனிதர்களை நோக்கி, மனங்களை நோக்கி இருக்கும். இந்த ஓவியங்கள் அதை நமக்கு காட்டுகிறது.
லியோ படம் ரொம்ப நன்றாக இருக்கும். படம் ரொம்ப நன்றாக வந்திருப்பதாக கேள்வி பட்டேன். விஜய் தம்பியும் படம் பார்த்திருக்கிறார். அவருக்கு படம் ரொம்ப பிடித்திருக்கிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும்.செப்டம்பர் 30 ஆம் தேதி சந்திப்போம்" என்றார். செப்டம்பர் 30 ஆம் தேதி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா இருக்க வாய்ப்பு இருப்பதாக இதன் மூலம் தெரிகிறது.
தொடர்ந்து ஏ. ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "அதை நான் பார்க்கவில்லை. ஊரில் இருந்து இப்போது தான் முதல் நிகழ்ச்சிக்கு வந்தேன் என்னை மாட்ட வைக்காதீங்க. மாட்ட மாட்டேன் என்று ஜாலியாக பேசிய மிஷ்கின். பிசாசு 2 வரும். வரும் இங்கு நிற்கிற எல்லாருமே பிசாசு தான்." என்று கேலியாக பதிலளித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!