Cinema
“ஆடு மேய்பவர்கள் IPS ஆனதும் கலைஞரால் தான்..” - இயக்குநர் ராஜு முருகன் புகழாரம் !
சென்னை தெற்கு மாவட்டம் சைதாப்பேட்டை மேற்கு பகுதி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் 'முன்னணி இயக்குநர்கள் பார்வையில் தமிழ்நாட்டின் இயக்கம் டாக்டர் கலைஞர்' என்ற தலைப்பில் பிரபல இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், வி.சி.குகநாதன், தங்கர்பச்சான், வெற்றிமாறன், ராஜூ முருகன் உள்ளிட்டோர் கலந்து உரையாற்றினர். மேலும் இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ராஜு முருகன், பராசக்தி படமில்லை என்றால் 'ஜோக்கர் படமே இருக்காது என்றார். இதுகுறித்து அவர் பேசியதாவது, "நான் சிறுவயதிலிருந்தே கலைஞர் பாடல்களை கேட்டவன். ஒரு செய்தியாளராக அவரை பேட்டி கண்டுள்ளேன். ஆன்ம ரீதியாக எனக்கு ஆசான இருக்கிறார் இப்போதும். எனக்கு மிகவும் மன நெருக்கடியான சூழலில் இரவு முழுவதும் பாரதியார் வீட்டு வாசலில் நின்றுள்ளேன்.
அதே போல் நம்பிக்கையை இழக்கும் போது திருவாரூர்காரனாக திருக்குவளைக்கு சென்று கலைஞர் வீட்டு வாசலில் நின்றுள்ளேன். கலைஞரின் 'பராசக்தி' படமில்லை என்றால் 'ஜோக்கர்' படமில்லை. பெரியார், மார்க்ஸ், அண்ணா மூன்று பேருக்கும் செயல்வடிவம் கொடுத்தவர் கலைஞர். பெரியாரின் சிந்தனைக்கு முழுவடிவம் கொடுத்து முன்மாதிரியாக கொண்டு வந்தவர் கலைஞர்.
பெண்களுக்கு குடும்ப சொத்தில் சம உரிமை பெற்றுக் கொடுத்தவர்; மே தினத்திற்கு விடுமுறை அளித்தவர். இன்றுள்ள தமிழ்நாடு இந்தியாவிற்கே முன்மாதிரி. வடக்கே அவர்கள் அரசியல் பொம்மைகளாக்கப்பட்டுள்ளார்கள். அதற்கு ஒரே காரணம் திராவிட இயக்கம் கலைஞரின் சிந்தனை. ஆடு மேய்பவர்கள் ஐ.பி.எஸ் ஆனதும் கலைஞரால் தான்.
சனாதனம் என்ன செய்யும் அதன் சின்னத்திற்கு 3000 ஆயிரம் கோடியில் சிலை வைக்கும். திராவிட இயக்கம் என்ன செய்யும் இன்னொரு மூலையில் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.." என்று எழுதியிருக்கும். 'பராசக்தி' பட வசனத்தில் கை ரிக்ஷா ஒழிப்பு பற்றி வரும். அதை எழுதிய கலைஞர் சட்டமன்றத்தில் செய்யவும் செய்தார்.
சினிமாவை வெகு ஜனங்களிடம் கொண்டு சென்றது பராசக்தி. அதனை தொடர்ந்து இன்றும் பல படங்கள் வருகிறது .எதிரிகள் எல்லாவற்றையும் தன்னுடைய அரசியலாலும் தமிழாலும் கட்டிப்போட்டவர் கலைஞர். சனாதம் பெயரில் இன்று எழக்கூடியவை தேவையில்லாதவை. இந்தியாவிலுள்ள 6 மாநிலத்தில் அறியாமையிலுள்ள மக்களிடம் வாக்கு வாங்க இவ்வாறு செய்கிறார்கள்.
ஒரு மதத்திற்கு எதிராக திராவிட இயக்கங்களை நிறுத்த முயற்சிக்கிறார்கள். ஆன்மிக பணிகளை அதிகம் செய்ததும் திராவிட இயக்கங்கள் தான். இன்றைக்கு உள்ள சூழலில் சனாதனத்திற்கு எதிராக சமூகநீதியை நிலை நாட்ட பெரியார், கலைஞர் பின்னால் நிற்பது தான் ஒரே வழி. 'இந்தியா' என்ற பெயரை மீட்டெடுப்போம்" என்றார்.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!