Cinema
‘குஷி’ பட Success : 100 குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம்.. விஜய் தேவரகொண்டாவின் அறிவிப்பால் நெகிழ்ச்சி !
விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் 'குஷி'. காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குநர் ஷிவா நிர்வணா இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த செப்டெம்பர் 1-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உலகளவில் திரையரங்கில் வெளியானது.
இதனிடையே இதன் புரோமோஷன் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. அப்போது விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் மேடையில் நடனமாடினர். இவர்களது நடனம் ரசிகர்களை குஷி படுத்தினாலும், திரை ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது. தொடர்ந்து இருவரும் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக லைவில் வீடியோ கால் பேசி வீடியோ வெளியிட்டனர்.
இந்த படம் தற்போது திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் மூலம் இந்த ஜோடிக்கு என்று புது ரசிகர்களே உருவாகியுள்ளனர். ஆன்மீக குடும்ப பின்னணியில் இருக்கும் சமந்தா, ஆன்மீகம் பொய், அறிவியல் தான் உண்மை என்று சொல்லும் நாத்தீகவாதியின் பின்னணியில் இருக்கும் விஜய் தேவரகொண்டா ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர்.
இரு வீட்டாரின் எதிர்ப்புக்களையும் மீறி திருமணம் செய்துகொண்டு வாழ்கின்றனர். இறுதியில் ஆன்மீகமும் அறிவியலும் இணைந்ததா என்பதே கதை. முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் வெளியாகி 4 நாட்களில் ரூ.60 கோடிக்கும் மேலாக வசூல் சாதனை படைத்துள்ளது. இதனால் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் நேற்று இந்த படத்தில் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அப்போது இதில் கலந்துகொண்டு பேசிய படம் குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டதோடு, குஷி படத்துக்கு ரசிகர்களின் வரவேற்புக்காக நன்றி தெரிவித்தார். அதோடு தனது சம்பளத்தில் இருந்து ஏழைகளுக்கு உதவுவதாகவும் தெரிவித்தார்.
அதாவது தான் வாங்கிய சம்பளத்தில் இருந்து ரூ.1 கோடியை 100 ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் என நன்கொடை வழங்கவுள்ளதாக தெரிவித்தார். தேவைப்படும் 100 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, அடுத்த 10 நாட்களில் வழங்கவுள்ளதாக குறிப்பிட்ட அவர், விரைவில் அவர்கள் யார் என்று அறிவிக்கப்படும் என்றார். இவரது இந்த செயல் தற்போது ரசிகர்கள் மத்தியில் மேலும் வியப்பையும், பூரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!