Cinema
Mark Antony : திடீரென மேடைக்கு வந்த இளம்பெண்.. ‘மகள்’ என அறிமுகம் செய்த விஷால்.. விழா மேடையில் ஷாக்!
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் விஷால். இவர் தற்போது 'மார்க் ஆண்டனி' என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரிது வர்மா, எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் செல்வராகவன், தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்ட பல முக்கிய திரை நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிறுவனம் முன்னதாக விஷாலின் 'எனிமி' படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பித்தக்கது. மார்க் ஆண்டனி படத்தின் டீசர் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. டைம் ட்ராவல் படமாக அமைந்துள்ள இந்த படத்தில் டெலிபோனை வைத்து விஷால் டைம் டிராவில் செய்வது தொடர்பான காட்சிகள் அதிலே இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில், இதன் ட்ரைலர் நேற்று வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதனை ட்ரைலர் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் விஷால் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் பேசிய விஷால், தனது மகள் என்று கூறி கல்லூரி படிக்கும் மாணவி ஒருவரை அறிமுகப்படுத்தினார். இதனால் அனைவரும் சற்று அதிர்ந்து போனர்.
இதுகுறித்து மேடையில் நடிகர் விஷால் பேசியதாவது, "சில மாதங்களுக்கு முன்னர் எனக்கு ஒரு விண்ணப்பம் வந்தது. அதில் கன்னியாகுமரியை சேர்ந்த மாணவி ஒருவர், அவருக்கு சென்னையில் இருக்கும் ஸ்டெல்லா மேரிஸ் பி.ஏ. ஆங்கிலம் படிக்க வேண்டும் என்றும், அதுதான் அவரது நீண்ட நாள் கனவு என்றும் கோரிக்கை வைத்திருந்தார். இதனை கண்டதும் நான் உடனே ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியை தொடர்பு கொண்டு பேசினேன்.
இதற்கு முன்பு அங்கு பேசியது கூட இல்லை. இவருக்காக முதன் முதலில் பேசினேன். அந்த கல்லூரி முதல்வருக்கு ஃபோன் செய்து இதுகுறித்து பேசியபோது, யோசித்துவிட்டு முடியாது என்று சொல்லிவிட்டார். உடனே நான், அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள். ஒரு செமஸ்டர் மட்டும் பாருங்கள். என் மகள் நல்லா படிப்பாங்க என்று சொன்னேன். பிறகு நாளைக்கு போன் செய்யுமாறு கூறினார்.
நானும் மறுநாளே போன் செய்து பேசினேன். அப்போது ஒரு செமஸ்டர் தான் பார்ப்பேன். நல்ல மார்க் எடுக்கவில்லை என்றால், சாரி விஷால் என்றார். கண்டிப்பாக என் மகள் நல்லா படிப்பேன் என்றேன். இப்போது வகுப்பில் இவர் தான் முதலாக இருக்கிறார். அப்போது ஸ்டெல்லா மேரிஸ் முதல்வர் என்னை தொடர்பு கொண்டு, 'விஷால் அடுத்த வருடத்திலிருந்து உனக்கு இரண்டு சீட் தருகிறேன்' என்றார்" என்று விஷால் பேசினார். இந்த நிகழ்வு அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !