Cinema
தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளம் நடிகை.. மலையாள திரையுலகில் மேலும் ஒரு அதிர்ச்சி !
மலையாள சின்னத்திரை உலகில் பிரபல நடிகையாக அறியப்படுபவர் அபர்ணா நாயர். 32 வயதான இவர், சின்னத்திரையில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். குறிப்பாக அட்டசக்தி, மைதிலி வேண்டும் வரம் போன்ற பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரவேற்பை பெற்றார். சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையில் நடித்துள்ள இவர், கல்கி, முத்துகவ், அச்சையன்ஸ், மேகத்தீரதம் உள்பட பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார்.
இதனிடைய இவருக்கு சஞ்சித் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர். திருவனந்தபுரத்தின் கரமனா என்ற பகுதியில் குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர், கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகை அபர்னா நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அவர் தற்கொலை செய்துகொண்ட நேரத்தில் அவரது வீட்டில் அபர்னாவின் தாயார் மற்றும் சகோதரி இருந்துள்ளனர். அந்த சமயத்தில் தனது அறையில் இருந்த அபர்ணா நேற்று இரவு 7.30 மணியளவில் தூக்கிட்டுக்கொண்டுள்ளார். நீண்ட நேரம் அவர் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக நடிகை அபர்ணா தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்தது. எனினும் பண பிரச்னையா அல்லது யாரேனும் மிரட்டல் விடுத்தது வந்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Also Read
-
மக்களே உஷார்... அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெல்லாம் அதி கனமழை பெய்யும்? - பாலச்சந்திரன் எச்சரிக்கை!
-
கன மழை எதிரொலி : உங்கள் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறையா?
-
கனமழை எச்சரிக்கை : பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் KKSSR செய்தியாளர்களிடம் பேசியது என்ன?
-
கன மழை எச்சரிக்கை : களத்தில் இறங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
மரணத்திலும் இணை பிரியாத தம்பதி : சோகத்தில் மூழ்கிய கிராமம்!