Cinema
ஒரு வழியா இந்திய குடியுரிமை பெற்ற பட்சி ராஜன்.. கனடா குடியுரிமையை துறந்த அக்ஷய் குமார்.. காரணம் என்ன ?
பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார், 1981-ல் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து வந்த இவருக்கு பெரிதாக வரவேற்பு இல்லை. குறிப்பாக 90-களில் இவரது நடிப்பில் வெளியான சில படங்கள் தோல்வியை சந்தித்தன. இருப்பினும் தொடர்ந்து நடித்து வந்த இவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
அதன்பிறகு பல ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர், தனது ஒரு படத்தினுடைய சம்பளத்தையும் கோடியில் மாற்றினார். அக்ஷய் குமார் நடித்தாலே அந்த படம் ஹிட் தான் என்று இருந்து வந்த நிலை, அண்மை காலமாக மாறியுள்ளது. தமிழில் சங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் 2.O படத்தில் 'பட்சி' கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பில் அண்மையில் வெளியான அனைத்து படங்களும் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், அவர் மட்டுமின்றி அவரது ரசிகர்களும் வேதனையில் உள்ளனர்.
இந்த சூழலில் இவர் கனடா குடியுரிமையை பெற்றிருந்தார். இதுகுறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேட்டி ஒன்றில் தெரிவித்த அவரை, திரை ரசிகர்கள் வசை பாடினர். தேச பக்தி தொடர்பான படங்களில் நடித்து வரும் இவரே, இந்திய நாட்டின் குடியுரிமையை பெறவில்லை என்று பல்வேறு விமர்சனத்துக்கு உள்ளானார்.
மேலும் தான் பாலிவுட் படத்தின் மூலம் சம்பாதித்த பணத்தை கன்னட நாட்டில் முதலீடு செய்ததாலும் கடுமையாக வசைபாடப்பட்டார். இவரது படங்களின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்திருந்தது. இந்த சூழலில் இவர் இதுகுறித்து அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் "எனக்கு எல்லாமே இந்தியாதான். நான் சம்பாதித்தது எல்லாமே இங்குதான். அதை நான் திரும்பக் கொடுக்க வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம்.
முன்னாள் எனது படங்கள் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. இதனால் எனது நண்பரின் அறிவுறுத்தலின் பேரில் கனடா நாட்டுக்கு சென்றேன்; அங்கே குடியுரிமையும் பெற்றேன். அந்த சமயத்தில் எனது நடிப்பில் வெளியான படங்கள் இந்தியாவில் ஹிட் கொடுக்கவே, திரும்ப இந்திய வந்தேன். அப்படியே தொடர்ந்து படங்களில் நடித்து இந்தியாவிலேயே இருந்துவிட்டேன்.
இதனால் கனடா பாஸ்போர்ட் இருப்பதையே மறந்துவிட்டேன். அந்த பாஸ்போர்ட்டை மாற்றி எடுக்க வேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை. இப்போது பாஸ்போர்ட்டை மாற்ற விண்ணப்பித்திருக்கிறேன். இது தெரியாமல் சிலர் பேசுகின்றனர்." என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அக்ஷய் குமார் தற்போது இந்தியன் குடியுரிமையை பெற்றுள்ளார். நாட்டின் 7-வது சுந்திர தின விழா நேற்று அனுசரிக்கப்பட்டது. அப்போது தனக்கு இந்திய குடியுரிமை கிடைத்து விட்டதாக நடிகர் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவை வெளியிட்டுள்ளார். இதனால் தற்போது ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக தனது கனடா குடியுரிமையை சரண்டர் செய்யும் விதமாக தனது கனடா பாஸ்போர்ட்டை அந்த நாட்டு அரசிடம் ஒப்படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!