Cinema
HBD Action King : அப்போ ஆண்டனி தாஸ், இப்போ ஹரால்டு தாஸ்.. லியோ படத்தின் அடுத்த அப்டேட் வெளியானது !
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம்தான் லியோ. திரிஷா, அர்ஜுன், மிஸ்கின், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், அனுராக் காஷ்யப், கெளதம் மேனன், சஞ்சய் தத், டான்சர் சாண்டி என திரைபட்டாளமே நடித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று நிறைவடைந்தது.
அனிருத் இசையமையக்கும் இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எகிறி இருக்கிறது. லோகேஷுடன் மாஸ்டர் படத்திற்கு பிறகு இணைந்த விஜய், இந்த முறை இந்த படத்தின் மூலம் LCU-வில் இணைகிறார்.
இதன் மீதி படப்பிடிப்பும் அண்மையில் நிறைவடைந்தது. சுமார் 125 நாட்களில் இதன் படப்பிடிப்பை லோகேஷ் முடித்ததாக ரசிகர்கள் பாராட்டினர். வரும் அக்டோபர் மாதம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் இந்த படத்தின் அப்டேட் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, லோகேஷ் கனகராஜ் இதன் ஒரு அப்டேட்டை வெளியிட்டார்.
இந்த சூழலில் கடந்த ஜூலை 29-ம் தேதி பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தனது 64-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு லியோ படக்குழு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவரது கதாபாத்திரம் குறித்த 'ANTONY DAS' Glimpse வீடியோ வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ஆக்சன் கிங் அர்ஜுன் இன்று தனது 61-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், லியோ படக்குழு அவரது கதாபாத்திரம் கிலிம்ஸ் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. அதன்படி இந்த படத்தில் அர்ஜுன் 'ஹெரால்டு தாஸ்' (Harold Das) என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி ரசிகர்கள் மத்தியில் வாழ்த்தும் வரவேற்பும் குவிந்து வருகிறது. அடுத்த செப்டெம்பர் 10-ம் தேதி அனுராக் காஷ்யப்புக்கும், 17-ம் தேதி நடிகை பிரியா ஆனந்துக்கும் பிறந்தநாள் வருகிறது. எனவே அடுத்தடுத்த கதாபாத்திரம் குறித்த அப்டேட்டை எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!