Cinema
Rolex, இரும்புக்கை மாயாவி.. லோகேஷின் அடுத்தடுத்த ப்ராஜக்ட்டில் இணையும் சூர்யா ? - வெளியான தகவலால் குஷி !
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு திரையரங்கில் வெளியான படம் தான் 'விக்ரம்'. உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம், நீண்ட இடைவெளிக்கு பிறகு கமலின் திரைப்படங்களில் வெற்றியை ஈட்டி தந்துள்ளது. தற்போது 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிய இந்த படம் கடந்த ஆண்டு வெளியான சிறந்த படங்களில் ஒன்றாக இருந்தது.
கமல்ஹாசன், காளிதாஸ் ஜெயராம், பகத் பாசில், காயத்ரி, விஜய் சேதுபதி என ஒரு திரைப்பட்டாளமே நடித்துள்ள இந்த படத்தின் கிளைமேக்ஸில் நடிகர் சூர்யா ‘ரோலக்ஸ்’ என்ற கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை மிரள வைத்திருப்பார். இதனால் ரசிகர்கள் சூர்யாவுக்கு ரோலக்ஸ் என்ற செல்லப்பெயரை வைத்துள்ளனர்.
ரோலக்ஸ் கதாபாத்திரம் பொருந்திய படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியிருக்கும் நிலையில், விஜய் நடிப்பில் உருவாகும் லியோ படத்தில் மீண்டும் ரோலக்ஸ் வருவாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இந்த சூழலில் ரோலக்ஸ் கதாபாத்திரம் ஒரு படமாகவே வரும் என்று சூர்யா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது நடிகர் சூர்யா, தனது ரோலக்ஸ் கதாபாத்திரத்தை தனிப்படமாக நடிக்கவுள்ளதாகவும், அதற்கான கதையை லோகேஷ் தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி 'இரும்புக்கை மாயாவி' கதையையும் தன்னிடம் லோகேஷ் கூறியுள்ளதாகவும், அதிலும் தனக்கு நடிக்க ஆர்வம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த செய்திகள் தற்போது சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது. முன்னதாக கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய லோகேஷ், 'இரும்புக்கை மாயாவி' தான் தனது ட்ரீம் ப்ராஜெட் என்றார். இந்த நிலையில், தற்போது சூர்யா இந்த படத்தில் நடிக்க ஆர்வம் தெரிவித்திருப்பதாக வெளியான செய்தி ரசிகர்களுக்கு பெரும் குஷியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!